குழந்தைகள் மீதான அத்துமீறல்... நாமக்கல்லில் வெடித்த போராட்டம்..!! ஆட்சியர் விளக்கம்..!!
நாமக்கல் பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆட்சியர் விளக்கம் அளித்தார்.
நாமக்கல்லில் 3 மற்றும் 12 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் அறிந்து ஆவேசமடைந்த சிறுமிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் வாக்குவாதம் செய்தனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகும். இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றமாகும். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
இதையும் படிங்க: "அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 3 மற்றும் 12 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமிகளிடம் அத்துமீறிய 59 வயதான வரதராஜ் என்பவரை ஏற்கெனவே காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மணி என்பவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். “பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை, மேலும் 2 சிறுமிகளும் நலமுடன் உள்ளதாக நாமக்கல் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். பாலியல் தொல்லை சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்திய நிலையில் ஆட்சியர் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: மாணவர்களே கவனிங்க... +2 சிபிஎஸ்சி விடைத்தாள் சரிபார்ப்பு... வரும் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம்.!