×
 

முட்டை பிரியர்களுக்கு ஷாக்..!! நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!!

நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 645 காசுகளாக இருந்து வந்தது.

நாட்டின் முக்கிய முட்டை உற்பத்தி மையமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை 645 காசுகள் (ரூ.6.45) ஆக இருந்த ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை, இன்று முதல் 650 காசுகள் (ரூ.6.50) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோழிப்பண்ணைத் தொழிலின் முதன்மை மையமாக திகழும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பண்ணைகளில் சுமார் 4 கோடி முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் தேவையை மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் கணிசமான அளவில் அனுப்பப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை ரூ.6.45 ஆக நிலைத்திருந்த நிலையில், உற்பத்திச் செலவு, தீவன விலை உயர்வு மற்றும் சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஆய்வு செய்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள், விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

இந்த விலை உயர்வின் தாக்கம் சில்லறை சந்தையிலும் எதிரொலிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது பல பகுதிகளில் ரூ.7 முதல் ரூ.7.50 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் முட்டையின் சில்லறை விலை, விரைவில் ரூ.8 வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரவிருக்கும் நாட்களில் சந்தைத் தேவை அதிகரித்தால் முட்டை விலையில் கூடுதல் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

இதையும் படிங்க: குழந்தைகள் மீதான அத்துமீறல்... நாமக்கல்லில் வெடித்த போராட்டம்..!! ஆட்சியர் விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share