×
 

பட்டப்பகலில் பயங்கரம்... மூதாட்டி கழுத்தறுத்து கொடூர கொலை..! நாமக்கல்லை உலுக்கிய கோரச்சம்பவம்..!!

நாமக்கல்லில் மூதாட்டி பட்டப்பகலில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அருகே பட்டப்பகலில் மூதாட்டி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்கச் சென்ற மகன் மீது கொலை வெறி தாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பூர்ணம் வயது 75 இவர் தனது மகன் சுப்பிரமணியுடன் ஒரே வீட்டில் வசித்து வரும் 

 நிலையில் இன்று காலை சுப்பிரமணி வெளியே சென்றிருந்த நிலையில் மூதாட்டி சம்பூர்ணம் தனியே வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சம்பூரணத்தை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகை 5 பவுன் செயினை திருடினர். அப்போது சுப்பிரமணி வீட்டினுள் வரவே அவரையும் மிரட்டி மேலும் ஏதேனும் பணம் நகை இருந்தால் எடுத்துக் கொடு என மிரட்டி அவர் மீது கொடூர தாக்குதல் தொடுத்து இருப்பதாக தெரிகிறது.

இதில் அவர் அலறியடித்துக் கொண்டு வெளியே வரவே குற்றவாளிகள் இருவரும் தப்பிச் சென்றனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த வெப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சம்பூரணம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: மனைவி, மாமியாரை கொடூரமாக வெட்டி சரித்த அரக்கன்... சடலங்களைப் பார்த்து ஸ்டன் ஆன ராமநாதபுரம்...!

இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சம்பூர்ணத்தின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட எஸ்பி டிஎஸ்பி மற்றும் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் சம்பவஇடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பட்டப் பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் வெப்படை பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: குடியைக் கெடுத்த குடி...!! - தலைக்கேறிய மதுபோதை... வேலூரில் பெற்ற தந்தைக்கு மகனால் நேர்ந்த பயங்கரம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share