×
 

ஸ்விக்கி, ஜோமேட்டோவுக்கு ஆப்பு... வந்தாச்சு உணவு டெலிவரிக்கு புது APP - ஓட்டல் உரிமையாளர்கள் அதிரடி...!

ஜோமேட்டோ, ஸ்விக்கி போன்ற செயலிகளுக்கு பதிலாக ZAAROZ என்ற பெயரில் புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, ஜோமேட்டோ நிறுவனங்கள் உணவகங்களிடமிருந்து பெறும் கமிஷன் தொகையைக் குறைக்க வேண்டும்; இல்லாவிட்டால் உணவு வழங்கப்படாது என ஜூலை 1ம் தேதி நாமக்கல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். 

சற்று பெரிய உணவகமாக இருந்தால் விளம்பர கமிஷன் என்று கூறி 40% கூட கமிஷன் வசூலிப்பதாகத் தகவல். ஸ்விக்கி, ஜோமேட்டோ நிறுவனங்கள் மூலம் விற்பனையாகும் உணவுகளுக்கான தொகை ஒரு வாரம் கழித்தே உணவகங்களுக்கு வருவதாக ஓட்டல் உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். டெலிவரி நிறுவனங்களுக்குக் கொடுக்கும் கமிஷன் தொகை போக தாங்கள் பெறும் தொகையில் லாபமே இல்லை என்றும் நாமக்கல் ஓட்டல் உரிமையாளர்கள் குற்றச்சாட்டினர். 

இதையும் படிங்க: சென்னையில் ஸ்விக்கி, ஜோமேட்டோ உணவு டெலிவரி ரத்து?... மொத்தமாக முடங்கும் அபாயம்...!


ஸ்விக்கி, ஜோமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் கமிசன் தொகையை 35% லிருந்து 18% ஆக குறைக்க வேண்டும், மறைமுக கட்டணம், விளம்பர கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும், நிறுவன ஊழியர்களின் நடவடிக்கைகளை சீர்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் இன்று முதல் திட்டமிட்டபடி ஸ்விக்கி, ஜோமேட்டோ நிறுவனங்களின் ஆர்டர்களை எடுக்காமல் புறக்கணிப்பு செய்வதாக நாமக்கல் தாலுக்கா ஹோட்டல் உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது. 

ஜூலை 1ம் தேதி முதல் இன்று வரை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு நாமக்கல் ஓட்டல்களில் இருந்து உணவு டெலிவரி நிறுத்தப்பட்ட  நிலையில், புத்தம் புது ஃபுட் டெலிவரி ஆப் ஒன்றிணை நாமக்கல் ஓட்டல் உரிமையாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஸ்விக்கி, ஜோமேட்டோ போன்ற செயலிகளுக்கு பதிலாக ZAAROZ என்ற பெயரில் புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து ஐம்பதுக்கு மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

மேலும் இந்த ஆப்பில் ஆர்டர் செய்தால் ஓட்டல் விலைக்கே உணவு வீடு தேடி டெலிவரி செய்யப்படும் என்றும் நாமக்கல் ஓட்டல் உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர். 

இதையும் படிங்க: ரபேல் விமானம் குறித்து பொய்களை பரபப்பும் சீனா! பொங்கி எழுந்த பிரான்ஸ்! விற்பனையை தடுக்க சதியா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share