×
 
☰

ஆன்லைனில் பட்டாசு வாங்கப்போறீங்களா?... ஆர்டர் போடுறதுக்கு முன்னாடி இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க... நாமக்கல்லில் நடந்த அதிர்ச்சி...!

குறைந்த விலையில் பட்டாசு, துணிமணிகள் தருவதாகவும், ஆன் லைனில் பணம் முதலீடு செய்தால், இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று கூறியும் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம், குறைந்த விலையில் பட்டாசு மற்றும் துணிகள் விற்பனை என போலி விளம்பரங்களை நம்பி, நாமக்கல் மாவட்டத்தில், 2 நாட்களில், 25 பேர் ஏமாந்து ரூ. 1.50 லட்சம் இழந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும், நவ., 8 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவதற்கு தயாராகி வருகின்றனர். பட்டாசு தேவைக்கு சிவகாசியில் இருந்து, பலரும் ஆன்லைன் மூலம் பட்டாசுகளை தேர்வு செய்து ஆர்டர் செய்கின்றனர். இதை பயன்படுத்தி, சில மோசடி கும்பல்கள் போலியான வெப்சைட் மற்றும் சோசியல் மீடியாக்களில் விளம்பரங்கள் செய்து, பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.

 இது குறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஏடிஎஸ்பி விஜயராகவன் கூறியதாவது: பொதுமக்கள் பட்டாசுகளை ஆர்டர் செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட இணையதளம் அல்லது நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: அதெல்லாம் முடியாது..! நாள் முழுக்க எப்படி பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும்..? சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!

சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை மட்டும் நம்பி பணம் செலுத்தக்கூடாது. வழக்கத்திற்கு மாறாக, அதிக தள்ளுபடி அறிவிக்கும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் இணைப்புகளை திறப்பதையும், வங்கி விபரங்கள் மற்றும் ஓ.டி.பி., போன்ற ரகசிய தகவல்களை பகிர்வதையும் தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக, சிவகாசி பட்டாசுகளுக்கு, 75 முதல், 80 சதவீதம் வரை தள்ளுபடி என போலி வெப்சைட் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் மோசடிக் கும்பல் பொதுமக்களை கவர்ந்து பணத்தை பறித்து ஏமாற்றி வருகிறது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், குறைந்த விலையில் பட்டாசு, துணிமணிகள் தருவதாகவும், ஆன் லைனில் பணம் முதலீடு செய்தால், இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று கூறியும் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கடந்த 2 நாட்களில், 25 பேர் புகார் தெரிவித்துள்ளனர். அதன் மூலம், ரூ. 1.50 லட்சம் இழந்துள்ளனர். ஆன்லைன் பட்டாசு விற்பனை அல்லது வேறு ஏதேனும் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தால், தாமதிக்காமல் உடனடியாக, 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

மேலும், தேசிய சைபர் குற்றப்புகார் வெப்சைட்டில் ஆன்லைன் மூலமாகவும் மூலமாகவும் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம் என கூறினார்.

 

இதையும் படிங்க: டெல்லி பேரணியில் கலந்துக்கோங்க!! தமிழக நிர்வாகிகளுக்கு ராகுல்காந்தி அழைப்பு! செலவால் தயங்கும் நிர்வாகிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share