டெல்லி பேரணியில் கலந்துக்கோங்க!! தமிழக நிர்வாகிகளுக்கு ராகுல்காந்தி அழைப்பு! செலவால் தயங்கும் நிர்வாகிகள்!
மாவட்டத் தலைவர்கள் தெரிவிக்கையில், டெல்லிக்குச் சென்று வர நான்கு நாட்கள் ஆகும். பயணச் செலவு, சாப்பாடு மற்றும் தங்கும் செலவை யார் ஏற்பது என்பதில் குழப்பம் உள்ளதாகக் கூறினர்.
சென்னை, அக்டோபர் 29: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியில் 10 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்பார்க்கிறார். இதற்காக மாநிலம் வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆர்வம் குறைவாக உள்ளது.
பேரணி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி இந்தப் பேரணியை நடத்தவுள்ளது.
இதையும் படிங்க: SIR விவகாரம்! பாஜக தலைமை அலுவலகத்தில் முக்கியக் கூட்டம்! அமித் ஷா அவசர ஆலோசனை!
மாவட்டத் தலைவர்கள் தெரிவிக்கையில், டெல்லிக்குச் சென்று வர நான்கு நாட்கள் ஆகும். பயணச் செலவு, சாப்பாடு மற்றும் தங்கும் செலவை யார் ஏற்பது என்பதில் குழப்பம் உள்ளதாகக் கூறினர்.
சென்னையில் கட்சித் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர்களுக்குள் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் காங்கிரசுக்கு 10 எம்.பி.க்கள், இரண்டு அமைச்சர்கள், மூன்று எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இரண்டு ராஜ்யசபா எம்.பி.க்கள் உள்ளனர். மாவட்டத்திற்குத் தலா 50 நிர்வாகிகளைக் கூட இவர்கள் செலவில் அழைத்துச் செல்வதில் ஆர்வம் காட்டவில்லை என மாவட்டத் தலைவர்கள் தெரிவித்தனர். கட்சியும் இதுகுறித்துக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: செலவை நீங்க ஏத்துக்குங்க! தமிழக காங்கிரசுக்கு மேலிடம் கொடுத்த உத்தரவு என்ன? தவிக்கும் நிர்வாகிகள்!