நான் முதல்வன் உதவித் தொகை நிறுத்தம்.? மாணவர்கள் அதிர்ச்சி..! தமிழக அரசு விளக்கம்..!!
நான் முதல்வன் திட்டத்திற்கு உதவித் தொகை நிறுத்தமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான நான் முதல்வன் (போட்டித் தேர்வு) உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இம்மாத உதவித்தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. இந்த செய்தி பலரிடையே குழப்பத்தையும், அவசியமற்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெளிவான விளக்கம் அளித்துள்ளது.
இந்த தகவல் முற்றிலும் தவறானது என்பதை அது உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இது குறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “பயனாளிகளுக்கான உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தவகையில், ஜூன் மாதத்திற்கான உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டம் தமிழ்நாடு அரசால் இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காகவும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கவும் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய முயற்சியாகும். இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் பீஸ்ட் பாடல்..? எது உண்மை..? தகவல் சரிப்பார்பகம் விளக்கம்..!!
மாதாந்திர அடிப்படையில் மூன்றாவது வாரத்தில் வங்கிக் கணக்கில் நிதி செலுத்தப்படும் வழக்கம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் இந்த விஷயத்தில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர். சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை உடனடியாக நம்புவதற்கு முன், அதிகாரப்பூர்வ ஆதாரங்களையும், அரசின் அறிவிப்புகளையும் சரிபார்த்து மட்டுமே பகிருமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோர முகத்தை காட்டிய இயற்கை... லட்சக்கணக்கானோர் உயிரிழப்பு?... வெனிசுலாவிற்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து...!