நந்தனம் ஆர்ட்ஸ் கல்லூரி கேன்டினில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை..! காமக்கொடூரர்கள் கைது..!
நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை நந்தனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலை, அறிவியல், வணிகவியல் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் வகையில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இளநிலைப் படிப்புகளில் B.A., B.Sc., B.Com போன்றவை அடங்கும். மேலும் BBA, BCA போன்ற தொழில்முறை படிப்புகளும் உள்ளன. முதுநிலைப் படிப்புகளில் M.A., M.Sc., M.Com உள்ளிட்டவை கிடைக்கின்றன.
கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றிருப்பதால் பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறைகளில் சில சுதந்திரங்கள் உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ் இயங்குகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் நூலகம், கேண்டீன், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், கணினி மையம் போன்ற வசதிகள் உள்ளன.
மிகவும் பிரபலமான நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த கல்லூரியில் செயல்பட்டு வரும் கேண்டினில் 22 வயதான அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பணிக்குச் சேர்ந்ததாக தெரிகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மனவளர்ச்சி குன்றியவர் போல் இருந்ததால் இரண்டே மாதங்களில் கணவர் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நீங்களாம் ஒரு முதல்வர்? கிரிமினல்களின் சொர்க்க பூமி தமிழ்நாடு...! அதிமுக கடும் கண்டனம்..!
இதை அடுத்து அந்தப் பெண் கல்லூரி கேண்டினில் பணிக்கு சேர்ந்துள்ளார். அவரை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கேண்டின் உரிமையாளர் செல்வம், அவரது நண்பர் கார்த்திக், மாஸ்டர் குணசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பணிக்கு சேர்ந்து 20 நாட்களே ஆன நிலையில் அந்தப் பெண் மனவளர்ச்சி குன்றியவர் போல் இருந்ததால் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அம்பலமாகி இருக்கிறது.
இதையும் படிங்க: அஜித் பவார் மரணம்..! விமானத்தில் நடந்தது என்ன? கருப்பு பெட்டியை மீட்டு தீவிர விசாரணை..!