ஈவு இரக்கமின்றி பாலியல் வன்கொடுமை...! நந்தனம் கல்லூரி கேட் கீப்பர் டிஸ்மிஸ்..!
நந்தனம் கல்லூரியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கேட் கீப்பர்
நந்தனம் அரசு கலை கல்லூரியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கல்லூரியின் காவலாளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் கேட் கீப்பர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கல்லூரி நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
மிகவும் பிரபலமான நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த கல்லூரியில் செயல்பட்டு வரும் கேண்டினில் 22 வயதான அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பணிக்குச் சேர்ந்ததாக தெரிகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மனவளர்ச்சி குன்றியவர் போல் இருந்ததால் இரண்டே மாதங்களில் கணவர் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து அந்தப் பெண் கல்லூரி கேண்டினில் பணிக்கு சேர்ந்துள்ளார். அவரை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கேண்டின் உரிமையாளர் செல்வம், அவரது நண்பர் கார்த்திக், மாஸ்டர் குணசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக?! அடுத்தவாரம் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பணிக்கு சேர்ந்து 20 நாட்களே ஆன நிலையில் அந்தப் பெண் மனவளர்ச்சி குன்றியவர் போல் இருந்ததால் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அம்பலமாகியது. இந்த நிலையில் நந்தனம் கலைக்கல்லூரியின் கேண்டின் பெண் ஊழியர் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காவலாளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கல்லூரியின் காவலாளி ஹையாது பணிகளை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கேட் கீப்பர் முருகனை பணிநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: கழிவு அள்ளுற உள்ளங்களுக்கு கொடுக்கிற நன்றி கடனா இது? தரமற்ற உணவு..! நயினார் கொந்தளிப்பு..!