ஒருத்தர் கூட வரலையே... தமிழகத்தின் ஹாட் ஸ்பாட் தொகுதியில் தலைகீழ் நிலவரம்... மறையாத சோகத்தின் வடு...!
தெற்கு நான்குநேரி பஞ்சாயத்து பகுதியில் காலை ஒன்பது 10 மணி வரை தேர்தல் புறக்கணிப்பு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு நான்குநேரி பஞ்சாயத்து பகுதியில் காலை ஒன்பது 10 மணி வரை தேர்தல் புறக்கணிப்பு தேர்தல் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் 227வது சட்டமன்ற தொகுதியான நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில சமூக விரோதிகளால் இரண்டு பேர்கள் அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து நாங்குநேரி பெரும்பத்து பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரிதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது பின்னர் அரசுஉரிய நடவடிக்கை எடுத்த பின் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: சூடுபிடித்த அரசியல் களம்..! நடிகை திரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு..!!
இதனைத் தொடர்ந்து இன்று நாங்குநேரி பெரும்பத்து அதன் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் எங்கள் பகுதிகளில் மீண்டும் இதே போல் சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு அரசு உத்தரவாதம் தந்தால் மட்டுமே நாங்கள் வாக்களிப்போம் என்றும் இது போன்ற தவறுகள் நடந்தால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மேலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தற்போது வரை தேர்தலை புறக்கணித்து வருகின்றனர்.
மேலும் சம்பவம் அறிந்து அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
இச் சம்பவம் நாங்குநேரி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுஇங்கு மொத்தம் ஆண்கள் 471 பேர் பெண்கள் 498 பேர் மொத்தம் 969 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு முன்னதாக நாங்குநேரில் கஞ்சா போதையில் இருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. இதனையடுத்து சிவகங்கை, நெல்லையில் இதேபோன்று அரிவாள் வெட்டு சம்பவங்கள் நடந்தது தமிழக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தெற்கு நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் முதல் 2 மணி நேரத்தில் 17.69% வாக்குப்பதிவு!! சட்டசபை தேர்தல் பரபர!! ஓட்டுப்பதிவு விறுவிறு!!