விஜயை அலட்சியப்படுத்தி யாரும் அரசியல் செய்ய முடியாது..! நாஞ்சில் சம்பத் திட்டவட்டம்..!
விஜய் அலட்சியப்படுத்தி யாரும் அரசியல் செய்ய முடியாது என நாஞ்சில் சம்பத் கூறினார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஒரு புதிய அரசியல் அலையை உருவாக்கியது. முதல் முறையாகத் தேர்தலை எதிர்கொண்ட இந்தக் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக மற்றும் அதிமுக போன்ற நீண்டகால அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளிய இந்த வெற்றி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெகவுக்கு 108 இடங்களுடன் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் விஜய்யும் தமிழக வெற்றி கழகத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு அரசியல் செய்ய முடியாது என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். வஞ்சகம், வன்மம், வக்ரம், அநீதி, அநியாயம், அக்ரமம், சூது, வாது, பொறாமை, அலட்சியம், அவதூறு ஆகிய படிகளைக் கடந்துதான் ஒரு கட்சி கரைசேர வேண்டும் என்றார். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் தடைகளை தாண்டி எதிர்நீச்சல் போட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: CM சீட்டை நோக்கி செல்லும் தலைவர் விஜய்..!! என் சபதம் நிறைவேறிடுச்சு..!! நாஞ்சில் சம்பத் நெகிழ்ச்சி..!!
நிலத்தை நிராகரித்துவிட்டு நதி நடக்க முடியாது என்றும் நீல வானத்தை அலட்சியப் படுத்திவிட்டு நிலவு சிரிக்க முடியாது என்றும் காற்றை கைது செய்துவிட்டு கால் மணி நேரம் கூட உயிர்வாழ முடியாது எனவும் தெரிவித்தார். தண்ணீரை மறுதலித்துவிட்டு தாகத்திற்கு விடை காண முடியாது; மின்சாரத்தைப் புறக்கணித்துவிட்டு புத்துலகு சமைக்க முடியாது என்று கூறிய அவர், விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தை அலட்சியப்படுத்திவிட்டு அன்னை தமிழக்த்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என்றார். நதிகள் நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. தேதிகள் கிழிபட உடன்படாவிட்டாலும் நாளை நடக்கும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: ஆட்சி அமைக்கும் கட்சிக்கு EPS வாழ்த்து..! யாரா இருக்கும்..? பொடிவைத்த எடப்பாடி.!