அச்சோ பாவம்! ஒன்னொன்னா கழண்டு ஓடுதே... NDA கூட்டணியை மீம்ஸ் போட்டு கலாய்த்த திமுக
டிடிவி தினகரன் nda கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.வின் முன்னாள் தலைவர்களாக இருந்த ஓ. பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும், கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வந்தனர். 2024 மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, ஓ.பி.எஸ். மற்றும் அமமுகவை இந்தக் கூட்டணியில் இணைத்திருந்தது.
ஆகஸ்ட் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது அவரைச் சந்திக்க ஓ.பி.எஸ். கோரிய வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அவர் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், அவர், அதிமுக ஒரு அணியில் இணைய வேண்டும் என்று சசிகலா கூறிய கருத்தை வரவேற்கிறேன் என்றார்.
எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்று கூறி, கூட்டணி மாற்றங்கள் குறித்து திறந்த மனதுடன் இருப்பதை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறுவதாக என்று டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பெரிய கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரும் என்று எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பேசி வந்த நிலையில் திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: “வீடு வீடாக போய் கெஞ்சி பிச்சை எடுக்கிறார்கள்...” - திமுகவை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி...!
பத்து தோல்வி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள் என்றும் NDA கூட்டணியில் இருப்பவர்களும் ஒவ்வொருவராக கூட்டணியை விட்டு வெளியே போய் கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறியது. ஏண்டி கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறுவதை மீம்ஸ் போட்டு திமுக கலாய்த்துள்ளது.
இதையும் படிங்க: எல்லாரும் போராடுறாங்க! எதுக்கு இந்த விளம்பரம் ஆட்சி? விளாசிய TTV