×
 

டிடிவி- க்கு பயம்... NDA இயற்கைக்கு முரணான கூட்டணி..! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!

டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக டிடிவி தினகரன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்க மாட்டோம் என்று கூறி கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் டிடிவி தினகரன் இடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறப் போவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.

NDA வில் டிடிவி தினகரன் இணைய சந்தர்ப்பவாதமும் பயமும் தான் காரணம் என தெரிவித்துள்ளார். என் டி ஏ கூட்டணி என்பது இயற்கைக்கு முரணான கூட்டணி என்ற தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியை துரோகி எனக் கூறி வந்த டிடிவி தினகரன் மீண்டும் அவருடன் கூட்டணியில் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி துரோகி எனக் கூறிய டிடிவி தினகரன் யாருக்கு ஓட்டு கேட்க போகிறார் என்ற கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: கஞ்சா போதையால் கொடூர கொலைகள்... சீரழியும் இளைய தலைமுறை... டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!

தேசிய ஜனநாயக கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்று கூறியுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்காது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுவது அவரது ஆசை என்று தெரிவித்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். திமுகவுடன் ஆன கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: சாதி, மத மோதல்களை ஏற்படுத்துவோரிடம் உஷாரா இருக்கனும்... பாஜகவை மறைமுகமாக சாடிய டிடிவி தினகரன்...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share