×
 

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதேபோல ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்ற மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. 

நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்ள 31 மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: கறுப்பு, சிவப்பு வேட்டியைப் பார்த்தாலே சிலருக்கு பயம்.. சரவெடியாக வெடித்த ஆ. ராசா.!!

இதனிடையே நீட் தேர்வில் முறைகேடு செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனும் மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி அணியக்கூடாது. தலைமுடியில் பின்னல் போடக்கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு தகுதி இருக்கா? - கர்ஜித்த முதலமைச்சர்... கப்சீப் ஆன எடப்பாடி... பேரவையில் காரசார விவாதம்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share