நெல்லையில் புதிய விண்வெளி மையம்! கட்டுப்பாடு மையம் அமைக்க டெண்டர் கோரிய இஸ்ரோ...
பாளையங்கோட்டையில் புதிய விண்வெளி கட்டுப்பாட்டு மையம் அமைக்க டெண்டர் கோரி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ 1969இல் நிறுவப்பட்டு, இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் தலைமையகம் பெங்களூரில் அமைந்துள்ளது, மேலும் நாடு முழுவதும் பல்வேறு மையங்கள் மூலம் இது செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இஸ்ரோவின் முக்கியமான மையங்களில் ஒன்று மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ உந்துசக்தி ஆராய்ச்சி வளாகம் (ISRO Propulsion Complex - IPC). இந்த மையம், திரவ உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதற்கும், ராக்கெட் இயந்திரங்களைச் சோதனை செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவு வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக 6.24 கோடி மதிப்பில் இஸ்ரோ டெண்டர் கோரியுள்ளது. மூன்று மீட்டர் உயரத்தில் கற்களினால் ஆன சுற்றுச்சுவர் கட்டப்பட வேண்டும் என்றும் உலகத் தரம் வாய்ந்த ராக்கெட் ஏவுக வளாகம் அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
2 ஆயிரத்து 376 ஏக்கர் நிலப்பரப்பில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் டிட்கோ நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொண்டன.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர்: தீவிரவாதத்தின் முதுகெலும்பை நொறுக்கினார் பிரதமர்.. மார்தட்டி சொன்ன அமித்ஷா..!!
இந்த நிலையில், குலசையில் 2வது ஏவுதளம் அமைக்கும் நிலையில், பாளையங்கோட்டையில் புதிய விண்வெளி கட்டுப்பாட்டு மையம் அமைக்க டெண்டர் கோரி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. ரூ.7.12 கோடி செலவில் டெண்டர் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விண்கலன்களை கண்காணிப்பது, கட்டளைகளை பிறப்பிப்பது போன்ற முக்கிய பணிகள் இந்த மையத்தில் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: 2ஆம் வகுப்பு மாணவி முகத்தை கடித்து குதறிய தெரு நாய்! நெல்லையில் அதிர்ச்சி..!