×
 

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!

தற்பொழுது 3வது சம்பவமாக பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி, தமிழக முதல்வர் விஜய் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடி படையை உருவாக்கி அதில் பெண் போலீசார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெண்களின் பாதுகாப்பிற்காக செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பெண்கள் படையில் உள்ள பெண் காவலர்கள் மாவட்டந்தோறும் பெண்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், நெல்லை பேட்டை  பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி, நேற்று மாலை பள்ளிக்குச் சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். 
அப்பொழுது அதே பகுதியைச் சார்ந்த நாகேஷ் வயது 21, என்ற வாலிபர் மாணவியை வழி மறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 


இதுகுறித்து மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.  அதனைத் தொடர்ந்து டவுன் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்பொழுது கைது செய்துள்ளனர்.  

இதையும் படிங்க: தென்காசி, நெல்லை அரிவாள் வெட்டு சம்பவத்தில் அதிரடி திருப்பம்... கைதான 6 பேரில் 5 பேருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

கடந்த ஜூன் 2ம் தேதி நெல்லை தச்சநல்லூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் 5 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்டார். தற்பொழுது 3வது சம்பவமாக பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: ஸ்டன் ஆன நெல்லை...!! - ஒரே வாரத்தில் 2வது அதிர்ச்சி சம்பவம்... 5 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share