எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி, கல்வீச்சு.. நெல்லையில் பரபரப்பு...!
நெல்லையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கருப்பு கொடி காட்டிய தேவர் அமைப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று நெல்லை டவுன் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி மாலை 5 மணிக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் மழை அதிகமாக பெய்ததால் பிரச்சாரத்தை முடித்து அடுத்த இடமான பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிக்கு தனது பிரச்சார வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நெல்லை ஜங்ஷன் தேவர் சிலை முன்பாக பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கருப்பு கொடியை காண்பித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அச்சச்சோ... எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு இப்படியொரு இடைஞ்சலா? - மடமடன்னு நடையைக் கட்டிட்டாரே...!
இதைப் பார்த்த அதிமுகவினர் சிலர் அங்கு கருப்பு கொடி காட்டிய தேவர் அமைப்பினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கல்வீச்சு சம்பவத்திலும் ஈடுபட முயன்றனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் இருந்து அவைகளை பிடுங்கினர். தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்படும் ஒரு சூழ்நிலையும் நிலவியது. இதனால் ஜங்ஷன் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: களமாட காத்திருக்கும் பாஜக.. நயினாரின் சூறாவளி சுற்றுப்பயணம்! பாஜக தொண்டர்கள் செம குஷி..!