காரிலேயே கருகிய குடும்பம்... உயிர் போகும் கடைசி நொடியில் தாயைக் கட்டிக்கொண்டு இறந்த பிள்ளைகள்... நெஞ்சை உலுக்கும் சோகம்...!
முகமது ரபி, அவரது மனைவி செய்யது நஸ்ரீன் பாத்திமா, மகன் முகமது காஜா மற்றும் மகள் அப்ரின் பாத்திமா என்ற அந்த நான்கு பேர் உயிரிழந்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையின்விளை அருகே முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்ட 4 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அனைவரும் ஒரே குடும்பத்தினர் எனவும் மகன் மற்றும் மகள் இருவரும் தாயை கட்டிப்பிடித்த நிலையில் சடலமாக இருந்ததும் நெஞ்சை பதற வைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லக்கூடிய சாலையில் உள்ள பனங்காட்டில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திசையன்விளை போலீசார் காருக்குள் கருகிய நிலையில் 4 சடலங்களை மீட்டெடுத்தனர். உடனடியாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததோட, தடய அறிவியல் துறை, மோப்ப நாய் உள்ளிட்டவைகளுக்கும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. திசையன்விளை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அந்த கார் எதற்காக அந்த பகுதிக்கு வந்தது? எந்த காரணத்திற்காக அவர்கள் அப்பகுதிக்கு வந்தார்கள் என்பது குறித்தான விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த சூழலில் தான் எரிந்த நிலையில் இருந்த காருடைய சேஸ் நம்பரை வைத்து, அந்த கார் எங்கிருந்து வந்தது என்பது குறித்தான விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். அப்போது தான் அந்த கார் சென்னை நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது ராபி என்பவருடையது என்பதும், குடும்பத்தோடு ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்ததும், அங்கு நோன்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு காரில் மீண்டும் புறப்பட்டுச் சென்றதும் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது.
இதையும் படிங்க: காரில் கருகிய உடல்கள் தற்கொலையா? கொலையா?... வெளியான பகீர் பின்னணி... சிக்கியது முக்கிய ஆதாரம்...!
இதனை தொடர்ந்து அந்த உயிரிழந்த நபர்கள் குறித்தான தகவல்களை போலீசார் சேகரித்தனர். அப்போது முகமது ரபி, அவரது மனைவி செய்யது நஸ்ரீன் பாத்திமா, மகன் முகமது காஜா மற்றும் மகள் அப்ரின் பாத்திமா என்ற அந்த நான்கு பேர் உயிரிழந்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அதன் பின்னர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் காரில் ஏசி இயங்கிக்கொண்டிருந்ததை உறுதிப்படுத்திய தடவியல் துறையினர், காருக்குள் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் மீது தீப்பற்றியதாக தெரிவித்துள்ளனர். மேலும் தீயில் கருகி துடிக்கும் கடைசி நேரத்தில் பிள்ளைகள் இருவரும் தாயைக் கட்டிக்கொண்ட சோகம் அரங்கேறியுள்ளதும் சடலங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தற்கொலையா? விபத்தா? என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகமது ரபி வந்து கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு சென்னை நந்தம்பக்கத்தில் உள்ள அவர்களது சொந்த வீடை விற்பனை செய்துவிட்டு நாகர்கோவிலுக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கிருந்து கார் மூலமே பல்வேறு பகுதிகளுக்கு சுற்றி வந்ததும், அதற்காக தங்களது உடமைகளை காரிலேயே வைத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்தது எதற்காக சென்றனர்? என்பது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் உறவினர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டு அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!