×
 

தமிழகத்தையே உலுக்கிய கொடூரம்... காருக்குள் ஒட்டுமொத்த குடும்பமும் செய்த பயங்கரம்...!

திருநெல்வேலி அருகே காருக்குள் எரிந்த நிலையில் எலும்பு கூடாக மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் கடன் தொல்லையால் விபரீத முடிவெடுத்த சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.

திருநெல்வேலி அருகே காருக்குள் எறிந்த நிலையில் எலும்பு கூடாக மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது பதைபதைக்க வைத்துள்ளது. கடன் தொல்லையால் விபரீத முடிவெடுத்ததன் பின்னணி என்ன? >> சென்னையில் ஆசை ஆசையாக கட்டிய வீட்டை விற்று பரிசல் செய்து கடன் நெருக்கடி கழுத்தை நிறுத்திருக்கிறது. ஊருக்குள் தலை காட்ட முடியாததால் காட்டு பகுதிக்குள் சென்று குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். உயிர் போகும் நேரத்தில் பெற்ற தாயை இரண்டு குழந்தைகளும் கட்டிப்பிடித்தபடி எலும்பு கூடாக கடந்தது.

இதயங்களை நொருங்கச் செய்திருக்கிறது. இந்த உலகை விட்டு செல்வதற்கு முன்பு கூட கடைசியாக தங்களது உடைமைகளை தானமாக கொடுத்துவிட்டு நான்கு உயிர்களும் பிரிந்து சென்றிருக்கின்றன. கொலை நடுங்க வைத்த சம்பவத்தில் நடந்தது என்ன திருநெல்வேலி மாவட்டம் திசையின் விலை காவலி எல்லைக்கு உட்பட்ட பெட்டைகுளம் பகுதியில் கார் ஒன்று முழுவதுமாக எறிந்த நிலையில் நின்று கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள். உடனே அருகேச் சென்று பார்த்தபோது அதற்குள் நான்கு பேர் முழுவதுமாக எரிந்த நிலையில் எலும்பு கூடாக இருப்பது தெரிய வந்தது.

தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலீசாரும் தீயணைப்பு துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். காரின் உள்ளே எலும்பு கூடாக கிடந்த நான்கு உடல்களும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் சென்னை நந்தபாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ரபி அவருடைய மனைவி சையது நஸ்ரீன் பாத்திமா மற்றும் அவர்களின் செல்ல குழந்தைகள் முகமது காஜா அப்ரீன் பாத்திமா ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் அண்மையில் சென்னையில்

இதையும் படிங்க: காரில் கருகிய குடும்பம்... காட்டுக்குள் வைத்து பெற்றோரே செய்த பயங்கரம்... வெளிவந்தது திடுக்கிடும் உண்மை...!

உள்ள தங்களது சொந்த வீட்டை விற்பனை செய்திருக்கின்றனர். பின்னர் காரிலேயே திருநெல்வேலி சென்றவர்கள் திங்கள்கிழமை ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் தர்காவிற்கு சென்று நோன்பு வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு சென்று குடும்பத்துடன் இந்த விபரீத முடிவு எடுத்தது. விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காரில் தொழில்நுட்ப கோளாறு எரிபொருள் கசிவு என ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்கிற கோணத்திலும் பொலீசார் விசாரணை நடத்தினர். தடையவியல்

ஆய்வு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவத்தின் முழுமையான உண்மையை கண்டறிவதற்காக போலீசார் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். இதில் தீயில் எரிந்து கருகிய கார் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் முகமது ரபி ஊற்றிக்கொண்டு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த முகமது ரபி உடல் முழுவதும் எறிந்து சாம்பலாகி இருக்கிறார். பின் இருக்கையில் இருந்த இரண்டு குழந்தைகளும் தங்களுடைய தாயார் நஸ்ரீன் பாத்திமாவை

கட்டி இணைத்தபடி எலும்பு கூடாக இருந்த காட்சி பார்ப்போரின் இதயங்களை நொருங்கச் செய்திருக்கிறது. இது தொடர்பாக மேலும் மேற்கொண்ட விசாரணையில் சென்னையில் உள்ள வீட்டை விற்று கடனை செலுத்திய போதும் முழுமையாக கடனை அடைக்க முடியாமல் முகமது ரபி கடும் மன [இசை] குளைச்சலில் இருந்தது தெரிய வந்தது. கடன் கொடுத்தவர்கள் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்து வந்ததால் தன்னுடைய குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தபோதும் வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணமும் உள்ளதா என்கிற கோணத்திலும் போலீசார் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி

வருகின்றனர். இதற்கிடையே உயிர் இழப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஆத்தங்கரை பள்ளிவாசல் அருகே அவர்களது உடைமைகளை தானமாக கொடுத்தது. சிசிடிவி கேமராவிலும் பதிவாகி இருக்கிறது. தற்கொலை செய்த நான்கு பேரையும் முகமது ரபியின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே உள்ள உறவினர்கள் அடையாளம் கண்டு உறுதி செய்திருக்கின்றனர். திருநெல்வேலி அருகே காருக்குள் எரிந்த நிலையில் எலும்பு கூடாக மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் கடன் தொல்லையால் விபரீத முடிவெடுத்த சம்பவம் பதிவதிக்க வைத்திருக்கிறது.
 

இதையும் படிங்க: காரிலேயே கருகிய குடும்பம்... உயிர் போகும் கடைசி நொடியில் தாயைக் கட்டிக்கொண்டு இறந்த பிள்ளைகள்... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share