நாளை மறுநாள் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்... இன்று போலீஸ் கமிஷ்னர் விட்ட வார்னிங்...!
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் ஜாதி ரீதியான கொடிகளை கட்டுவது உள்ளிட்ட சட்டவிரோதமாக செயல்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கமிஷ்னர் எச்சரித்துள்ளார்.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் ஜாதி ரீதியான கொடிகளை கட்டுவது உள்ளிட்ட சட்டவிரோதமாக செயல்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட இருக்கிறது: 1800 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் எனவும் நெல்லை போலீஸ் கமிஷனர் சஞ்சய் சேகர் தேஷ்முக் தகவல்
நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா தேரோட்டம் வருகின்ற ஜூன். 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் சேகர் தேஷ்முக் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஜூன் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இதையும் படிங்க: மீண்டும் தலை தூக்கும் சாதிய மோதல்?... நெல்லையில் அரசு பள்ளி மாணவர்களிடையே அடிதடி... வெளியான பகீர் காரணம்...!
பக்தர்களின் பாதுகாப்புக்காக மாநகர காவல் துறை சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.1800 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள் வெளிமாவட்டங்களைச் சார்ந்தவர்களும் வர இருக்கிறார்கள்.
250 கண்காணிப்பு கேமராக்கள் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட இருக்கிறது.5 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட இருக்கிறது. 18 இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.4 ரத வீதிகளிலும் 8 காவல் உதவி மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்கள் பக்தர்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக அங்கு இருக்கும் காவல்துறையினரை அழைக்கலாம்.வாகனங்களை சாலைகளில் நிறுத்த வேண்டாம்.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின் போது ஜாதி ரீதியான கொடி கட்டப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட ஒருவர் மீது 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். ஜாதி ரீதியான கொடிகளை கட்டுவது சட்டவிரோதமாக செயல்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கு தொந்தரவு தரக்கூடிய pp களையும் (அதிக சத்தமிடும் கருவி) கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 10 வகையான கிரைம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கடும் வெயிலில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினருக்கும் சாப்பாடு, தண்ணீர், மோர் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்திருக்கிறோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: நெல்லையில் தொடரும் பயங்கரம்... 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 2 வாரத்தில் இத்தனை வழக்குகளா?