நெல்லையில் தொடரும் பயங்கரம்... 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 2 வாரத்தில் இத்தனை வழக்குகளா?
கடந்த 2 வாரத்திற்குள் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 4 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
நெல்லையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வாரத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் வயது 28. கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக அதே பகுதியைச் சார்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பெருமாள் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். அதை நம்பிய சிறுமியை இரவு நேரத்தில் பெருமாள் அருகில் இருக்கக்கூடிய காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!
இரவு நேரத்தில் சிறுமியை காணாத பெற்றோர் தேடி இருக்கிறார்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்த சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். விசாரணையில் பெருமாள் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடக்கினர்.
விசாரணை அடிப்படையில் பெருமாள் தலைமறைவாக இருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2 வாரத்திற்குள் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 4 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது
இதையும் படிங்க: தென்காசி, நெல்லை அரிவாள் வெட்டு சம்பவத்தில் அதிரடி திருப்பம்... கைதான 6 பேரில் 5 பேருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்...!