×
 

#BREAKING கோடி கோடியாய் பணம் பதுக்கல்?... மின்னல் வேகத்தில் களமிறங்கிய பறக்கும் படை... நெல்லையில் பரபரப்பு...!

வாக்காளர்களுக்கு வினியோகிக்க கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள தனியார் குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். வாக்காளர்களுக்கு வினியோகிக்க கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீயாய் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது, வாக்காளர்களுக்குப் பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுப்பது மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள், மதுபானம் ஆகியவற்றைக் கண்காணித்து பறிமுதல் செய்வது என தேர்தல் பறக்கும் படை 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது. மேலும் பரிசு பொருட்கள், பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு அறை மற்றும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதனிடையே, நெல்லை பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 18 குடியிருப்புகள் கொண்ட ஒரு அப்பார்ட்மெண்டில் பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம் தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடவடிக்கைகளை தொடங்கினர். மேலும் அவர்களுடன் இணைந்து வருமான வரித்ததுறை அதிகாரிகளும் அப்பார்ட்மெண்டில் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சந்தேகரமான இடங்கள், அறைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன. 

இதையும் படிங்க: 60 பெட்டிகளில் கட்டு கட்டாய் பணம்... 7,90,380 ரூபாயை கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!

இந்த நிலையில் பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் கிடைக்காததால் முழு அப்பார்ட்மென்ட் முழுவதுமே போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தவித அசமாதமும் நடைபெறாதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் தகவல் உண்மைதானா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இருக்கக்கூடிய 10 அப்பார்ட்மெண்டில் இருக்கக்கூடிய 10 வீடுகளுமே சோதனை நடந்து வருகிறது. ஒவ்வொரு வீடு வீடாக சோதனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலை வருகிறது.

இதையும் படிங்க: “மனித உயிருக்கு ஆபத்து...” - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பாய்ந்தது வழக்கு - பரபரப்பு காரணம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share