நெல்லையில் ரத்த வெறி... தந்தை-மகன் கொடூரக் கொலை..! தலையை வெட்டி நடுரோட்டில் வைத்து சென்ற மர்ம கும்பல்..!!
நெல்லையில் தந்தை மற்றும் ஐந்து வயது மகனை மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் தந்தை மற்றும் ஐந்து வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே காளிமுத்து என்பவரும் அவரது ஐந்து வயது மகனின் தலையை வெட்டி மர்ம கும்பல் கொலை செய்துள்ளது. தந்தை காளிமுத்துவின் தலையை துண்டித்து நடுரோட்டில் கொலையாளிகள் வைத்துச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
தனது மகன்களுடன் வைக்கில் சென்ற காளிமுத்துவை பின்னால் காரில் வந்து எடுத்து கீழே தள்ளி மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகனான ஜெயராஜை அந்த கும்பல் கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காளிமுத்துவின் தலையை மட்டும் கல்லிடைக்குறிச்சி - நெல்லை நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் வைத்து விட்டு அந்த கும்பல் சென்றிருப்பது நெல்லை மாவட்டத்தை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. படிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!
கொலைக்கு காரணமான அந்த மர்ம கும்ப கும்பல் யார் என்பது தொடர்பாகவும் எதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்பது குறித்தும் பின்புறத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பாகவும் முழு விவரத்தை பெற போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த காளிமுத்துவின் மூத்த மகன் சின்னராஜ் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நாளை மறுநாள் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்... இன்று போலீஸ் கமிஷ்னர் விட்ட வார்னிங்...!