×
 
☰

பணத்தை கொட்டி படுத்து உருண்ட மதுமிதாவுக்கா இந்த நிலைமை?... நெல்லை போலீஸ் போட்ட போடு...!

நெல்லை காண்ட்ராக்டரிடம் நகை பறித்த வழக்கு தொடர்பாக விசாரிக்க  கன்னியாகுமரி யூடியூபர் மதுமிதாவை நேரில் ஆஜராக வருமாறு காவல்துறையினர் சம்மன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்பு பகுதியைச் சார்ந்தவர் மதுமிதா வயது 28. இவர் இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் ரீல்ஸ் வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமான யூடியூப்ராக வலம் வருகிறார்.

இந்த நிலையில் அதிக அளவில் நகைகளை அணிந்த வாரம் பணக்கட்டுகளை கைகளில் வைத்த வாரும் ரீல்ஸ்களை வெளியிடுவதை மதுமிதா வாடிக்கையாக வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதுமிதாவின் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்து 118 பவுன் நகைகளை கொள்ளையடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த நான்கு பேரை கைது செய்து 98 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். 

இதையும் படிங்க: "வச்சான் பாரு ஆப்பு எனக்கு...” - பணத்தைக் கொட்டி வீடியோ போட்ட மதுமிதாவுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

இந்த விவகாரம் முடிவதற்குள் நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சார்ந்த காண்ட்ராக்டர் பேச்சுமுத்து என்பவர் மதுமிதா மீது தன்னிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி மசாஜ் செய்து கொண்டிருக்கும் பொழுது  5 பவுன் நகையை பறித்து விட்டார் என ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் மதுமிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் புகார்தாரர் நெல்லை பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருப்பதால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் அந்த வழக்கை நெல்லை பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு மாற்றினர். 

அதன் அடிப்படையில் நெல்லை தாலுகா காவல்துறையினர் மதுமிதாவை இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த நேரில் வருமாறு சம்மண் அனுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: பல பேருடன் திருமணம்... ஸ்பாவில் பாலியல் தொழில்... யூடியூபர் மதுமிதாவின் ஷாக்கிங் பின்புலம்... களத்தில் இறங்கிய போலீஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share