தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்... 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கண்ணில் பட்டவர்களை வெட்டி வீசிய சம்பவம்: 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது. என்ன காரணம் என காவல்துறை தீவிர விசாரணை.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் சர்ச் தெருவிற்குள் நேற்று மாலை 10 பேர் கொண்ட மர்மகும்பல் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் புகுந்து சாலையோரங்களின் நின்று கொண்டிருந்த 6 இளைஞர்களை கார்த்தி உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்களுடன் வெட்டினர். மேலும் வெறி அடங்காத முகமூடி அணிந்த மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து நெல்லை மாவட்டம் மானூர் தெற்குப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களில் வேகமாக சென்று கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த முபாரக் மற்றும் அப்துல் ரகுமான் இருவரும் ஏன் வேகமாக செல்கிறீர்கள் என முகமூடி அணிந்தவர்களிடம் கேட்டுள்ளனர். உடனே ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் கேள்வி கேட்ட மானூர் தெற்குப்பட்டியைச் சேர்ந்த முபாரக் மற்றும் அப்துல் ரகுமானை சரமாரியாக அரிவாளை மாற்றி பிடித்து வெட்டினர்.
காயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை மாவட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் நடைபெற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: 10 மாதம் தலைமறைவு... தட்டித் தூக்கிய போலீஸ்...!! கதறி அழுத சுர்ஜித்தின் தாய்..!!
அதன் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை முதல் கட்டமாக நெல்லை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை இன்று அதிகாலை நெல்லை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிலும் இந்த வழக்கில் மொத்தமாக 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 சிறுவர்கள் அடங்கியுள்ளனர்.
இவர்கள் எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் காவல்துறை தீவிரவு விசாரணை செய்து வருகின்றனர். இந்த மர்ம கும்ப கும்பலுக்கும் காயம் அடைந்த நபர்களுக்கும் ஏதேனும் முன் விரோதம் இருக்கிறதா அல்லது ஜாதிய ரீதியான மோதலா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டம் மக்கள் மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு..! எல்லை மீறிய இளைஞர்... லாடம் கட்டிய போலீஸ்..!