×
 

வார்டு பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டியதால் ஆத்திரம்... தவாக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல்...!

நெல்லையில் தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நெல்லையில் தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகத்திற்குள் புகுந்த சிலர் கடும் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதில் முகமது யாசிர் என்பவர் பலத்த காயங்களுடன் பேசுவது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நெல்லை 50 ஆவது வார்டு கவுன்சிலர் ஆதரவாளர்கள் தான் இதுபோல செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

நெல்லை மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வார்டின் பிரச்சனையை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டதால் சம்பந்தப்பட்ட கவுன்சிலரின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த தாக்குதல் நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு மக்கள் பிரச்சினைகளை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எடுத்துரைத்து வருகிறார்.

மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி விளங்கி வருகிறது. இந்த நிலையில் வார்டு பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டியதால் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் முதல்வர்... மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு... செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்...!

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து முகமது யாசிர் என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டையில் ரத்தக்கரைகளுடன் அவர் பேசும் வீடியோவும் தாக்குதல் நடத்தும் வீடியோவும் வெளியானது. வார்டு பிரச்சனையை வீடியோவாக வெளியிட்டதால் ஆத்திரத்தில் இதுபோல் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி 50 ஆவது வார்டு கவுன்சிலரின் ஆதரவாளர்கள் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: நெல்லை மக்களே ரெடியா?... ரூ.356 கோடியில் பிரம்மாண்ட திட்டங்கள்... அமைச்சர் கே.என்.நேரு சொன்ன குட்நியூஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share