×
 

இதெல்லாம் நமக்குத் தேவையா? - தினக்கூலிகளை திண்டாடவிட்டு ‘கூலி’ படத்தை கொண்டாடிய முதல்வர்...!

பணி நிரந்தரம் கோரி போராடிய கூலி தொழிலாளர்களை திண்டாடவிட்டுவிட்டு, உங்களுக்கு கூலி படம் கேட்குதா? என சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 'கூலி' படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்து, படக்குழுவினரை மனதாரப் பாராட்டியுள்ளார். இந்தச் செய்தி, சமூக வலைத்தளங்களில், ஒரு பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நேற்று சன் டி.வி அலுவலகத்தில் கூலி படம் திரையிடப்பட்டுள்ளது இதனை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருந்தார். ஆனால் நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். 

கடந்த 13 நாட்களாக மழை, வெயிலை பொருட்படுத்தாமல் அமைதியான முறையில் போராடி வந்த தூய்மை பணியாளர்களை நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, போலீசாரை வைத்து குண்டுக்கட்டாக கைது செய்து அப்புறப்படுத்தியது தமிழ்நாடு அரசு.  அதுவும் கைது நடவடிக்கையின் போது போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மோதலில் ஏராளமான பெண் தூய்மை பணியாளர்கள் மயக்கம் அடைந்தனர். 

இதையும் படிங்க: இனி வீடு தேடி ரேஷன் பொருட்கள்.. தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

இதுதொடர்பான வீடியோக்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழகமே கொந்தளித்து வரும் இந்த சம்பவத்தை பற்றி கண்டுகொள்ளாமல், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கூலி திரைப்படம் பார்த்து கொண்டாடியது நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்துள்ளது. 

பணி நிரந்தரம் கோரி போராடிய கூலி தொழிலாளர்களை திண்டாடவிட்டுவிட்டு, உங்களுக்கு கூலி படம் கேட்குதா? என சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: செப்.-ல் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாடு பயணம்.. எந்தெந்த நாடுகள் தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share