×
 

ஓசியில் சோறு தின்னு வயிறு வளர்த்த உனக்கு எப்படி தெரியும்?... இர்ஃபானை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்...!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவி செய்கிறேன் என்கிற பெயரில் சீப்பான பப்ளிசிட்டி  ப்ராப்ள யூடியூபர் இர்பான் செய்த முகம் சுழிக்க வைத்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவி செய்கிறேன் என்கிற பெயரில் சீப்பான பப்ளிசிட்டியூடியூபர் இர்பான் செய்த முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளால் கொந்தளித்துப் போன நெட்டிசன்கள் அவரை சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். 

 யூடியூபர் இர்பானுக்கு சர்ச்சைகள் புதிதல்ல ஏற்கனவே தனது மனைவியின் கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை வெளியில் கூறி வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். அப்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அந்த வீடியோவை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார். அப்போதும், இர்பான் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காதது கடும் விமர்சனங்களுக்குள்ளானது. 

மறுபடியும் தனது வேலைக்காட்ட ஆரம்பித்த இர்பான், கடந்த 2024 ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் நின்று தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற வீடியோவை வெளியிட்டு மீண்டும் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்கிற ரீதியில் செயல்பட்டார். அதுவும் அந்த வீடியோவில் இர்பானே கத்திரிகால் தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற காட்சி இருந்ததால் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இர்பான் மீது சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அடிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அவர் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க: மக்கள் மனதில் எடப்பாடி பழனிச்சாமிக்குதான் முதலிடம்.. உரக்கச் சொல்லும் ஆர்.பி. உதயகுமார்.!!

இந்நிலையில்தான் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பணம் ஒரு லுங்கி புடவை என ஏழ்மையானவர்களுக்கு கொடுக்கப் போவதாக வீடியோவில் தெரிவித்துவிட்டு குடும்பத்துடன் சொகுசு காரில் சென்னை மவுண்ட் ரோடு அருகில் உள்ள இடங்களுக்கு சென்றுள்ளார். அப்போது காரை விட்டு இறங்காமல் உள் இருந்தபடியே பணம் லுங்கி புடவைகளை எடுத்துக் கொடுக்க, வறுமை வாடிக்கொண்டிருப்பவர்கள் கெஞ்சலோடும் பரிதாபத்தோடும் ஓடிவந்து அடித்துப் பிடித்துக்கொண்டு வாங்கிய காட்சி காண்போரை கலங்கடித்தது.

 “காருக்குள் உட்கார்ந்து கொண்டு கையை உள்ள விடாதீங்க ஏன்மா இப்படி பண்றீங்க அசிங்கமா பண்ணாதீங்க தள்ளுங்கம்மா ஏங்க புடிச்சு இழுக்குறீங்க என இர்பான் டென்ஷன் ஆவதும். அவன் எப்படிபண்றான் பார்த்தியா நல்லது செய்யறதுக்கு தானடா வந்தோம் என இர்பானும் அவரது மனைவியும் நக்கலாக சிரிப்பதும்” என அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி கடுமையான கண்டனங்களை உருவாக்கி வருகிறது. 

ஆரம்பத்தில் ஒவ்வொரு ஹோட்டலுக்கும் சென்று ஃபுட் ரிவ்யூ செய்வதாகக் கூறி மூக்கு பிடிக்க ஓசிச்சோறு தின்று வயிறு வளர்த்தவர் தான் இந்த இர்பான் என இவருக்கு எப்படி வறுமையில் வாடும் மக்களின் கஷ்டம் புரியும் என சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கி வருகின்றனர். அதேபோல வறுமையில் தவிக்கும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கத்தான் செய்வார்கள் அதையெல்லாம் இழிவாக பேசி நக்கலாக சிரித்து வீடியோ எடுத்து வெளியிடலாமா என பலரும் கடுமையான கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். 

இதையும் படிங்க: பொட்டை அழிச்சிட்டு வாங்க... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆ.ராசா...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share