தாய் பால் குடிக்கும் போது மூச்சுத்திணறல்... பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி...!
அடக்கம் செய்ய கொண்டு சென்ற நிலையில் மீண்டும் உயிர் பெற்றதாக மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழப்பு - அடக்கம் செய்ய கொண்டு சென்ற நிலையில் மீண்டும் உயிர் பெற்றதாக மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இராஜக்காபட்டியைச் சேர்ந்த ராஜா - ரியா தம்பதிக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் இன்று தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கிய நிலையில் குழந்தை தூங்குவதாக நினைத்த தாய், நீண்ட நேரமாக அசைவின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார், விரைந்து வந்து குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.,
இதையும் படிங்க: “மோடி வீட்டு கதவை தட்டாவிட்டால் ஜோலி முடிஞ்சிடும்...” - திமுகவை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி...!
குழந்தை இறப்பில் சந்தேகம் இல்லை என உடற்கூறாய்வு செய்யாமலேயே
உறவினர்கள் குழந்தையை அடக்கம் செய்ய எடுத்து சென்ற சூழலில், செல்லும் வழியிலேயே குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்தாக மருத்துவமனைக்கு குழந்தையுடன் உறவினர் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மீண்டும் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்தை உறுதி செய்தனர், தொடர்ந்து குழந்தையின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ‘குவா... குவா’... தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்ட சிங்கப்பெண்...!