×
 

ஆட்டம் ஆரம்பம்... நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... சுழட்டி அடிக்க போகுது...!

வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தம் வலுப்பெறாமல் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறாமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனிடையே காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து விட்டதாகவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "HIGH ALERT"... ப்ளீஸ் திரும்பி வந்துடுங்க... நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை...!

இதற்கிடையில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வளிமண்டல மேலடுக்க சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இதையும் படிங்க: ஆரஞ்சு அலர்ட்! அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே! 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share