இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில் திடீர் மாற்றம்... இந்த மொழி கட்டாயம் - வெளியானது அதிரடி அறிவிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்புகளில் செயற்கை நுண்ணறிவு பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கியமான உயர்கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம், 2025–26 கல்வியாண்டு முதல் பொறியியல் இளங்கலை (B.E./B.Tech) படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் மாணவர்கள் எதிர்கால தொழில்துறையில் போட்டியிடும் வகையில் திறன் பெறுவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பான முடிவை எடுத்துள்ளது. அனைத்து பொறியியல் படிப்புகளிலும் கட்டாயப் பாடமாக ஏஐ சேர்க்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் தங்களது ஐடியாவை தயாரிப்பாக மாற்றக் கற்றுக் கொள்ளவும், ஸ்டார்ட்அப் கலாச்சாரத்துக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் டேட்டா சயின்ஸ், இயந்திர கற்றல், தயாரிப்பு மேம்பாடு, கண்டுபிடிப்புகள், காலநிலை மாற்றம், வாழ்க்கைத் திறன்கள், உடற்கல்வி பாடங்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.,: தனியார் கல்லூரிகளில் ஆக.18 முதல் வகுப்புகள் தொடக்கம்..!
அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளிலும் இந்த புதிய பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. மாற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: AI-ஐ கத்துக்கோங்க.. இல்லனா அவ்வளவுதான்.. ஊழியர்களுக்கு ஆப்பிள் CEO டிம் குக் வார்னிங்..!!