×
 

2026 புத்தாண்டில் பட்டாசு வெடிக்க தடை... மீறினால்..! காவல்துறை கடும் எச்சரிக்கை...!

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை மாநகரில் பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிப்பதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சென்னை பெருநகர காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் பொதுவாக இரவு நேரத்தில் நடைபெறுவதால், சத்தம் மற்றும் காற்று மாசு அதிகரிப்பதைத் தடுக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் இந்தத் தடை அமல்படுத்தப்படுகிறது.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் அல்லது சமூகக் குடியிருப்புகளில் ஏதேனும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டுமானால், அதற்கு முன்கூட்டியே காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பைக் சாகசத்தை தடுக்க பிரத்யேக தனிப்படைகள் அமைத்து அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அன்பு, அமைதி, சத்தியம் நிலைக்க... EPS கிறிஸ்துமஸ் தின வாழ்த்து...!

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக சென்னையில் மட்டும் 19,000 போலீசாரும், தமிழகம் முழுவதும் 70,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னையில் பரந்த அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, கடற்கரைப் பகுதிகள் உட்பட பொது இடங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தை உறுதி செய்யும் நோக்கிலானவை. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கோவா துயரச் சம்பவம்: தாய்லாந்திற்கு எஸ்கேப்பான ஓனர்கள்..!! இண்டர்போல் உதவியை நாடும் போலீஸ்..!!

நாளை இரவு 9 மணியில் இருந்து மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, அண்ணாநகர், கொளத்தூர் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தி பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Mobile Surveillance Team எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு Tata Ace போன்ற வாகனங்களில் P.A.System, Flickering Light போன்றவை பொருத்தி மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனங்கள் அதிகம் சேரும் இடங்களில் அவை உபயோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share