×
 

புத்தாண்டு கொண்டாட்டம்... போதைப் பொருள் கும்பலை தட்டி தூக்கிய போலீஸ்...!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்வதை தடுக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

மெத்தம்பெட்டமைன், பொதுவாக "மெத்" என்று அழைக்கப்படும் இந்த போதைப்பொருள், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களை அழித்து வரும் ஒரு சக்திவாய்ந்த மூளை செயல்பாட்டைத் தூண்டும் பொருளாகும். இது ஒரு செயற்கை ஊக்கமளிக்கும் மருந்து, அம்பெட்டமைனின் ஒரு வகையான தோற்றவடிவம். தனது தோற்றத்திலிருந்தே இது மனிதர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கும் திறன் கொண்டது. 

மெத்தம்பெட்டமைன் பயன்படுத்தப்படும் முறைகள் பலவகையானவை. இது வாய் வழியாக விழுங்கப்படலாம். மூக்கு வழியாக உறிஞ்சப்படலாம். புகைப்படுத்தப்படலாம் அல்லது ஊசி மூலம் செலுத்தப்படலாம். ஊசி மூலம் செலுத்தும்போது, தாக்கம் 5-10 நிமிடங்களுக்குள் தொடங்கி, 8-24 மணி நேரம் நீடிக்கும். புகைப்படுத்தும்போது, உற்சாக உணர்வு உடனடியாக ஏற்படும். சட்டப்பூர்வமாக, ADHD சிகிச்சைக்கு 5-25 மி.கி. அளவில் தினசரி பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல் கஞ்சா, வலி நிவாரண மாத்திரைகள் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன. 2026 புத்தாண்டு நெருங்கி வருகிறது. இந்த நிலையில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அதனை கட்டுப்படுத்த போலீசா தீவிர சோதனை நடத்தினர். இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போதைப்பொருள் விற்பனை செய்ய இருந்த ஐடி ஊழியர் உள்ளிட்ட 5 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: நெருங்கும் புத்தாண்டு... தலை தூக்கும் போதைப்பொருள் சப்ளை... தீவிர சோதனை...!

5 பேரும் மாமல்லபுரத்தில் நடைபெறும் சைக்கோ மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்ட‌து விசாரணையில் அம்பலமானது. கைதானவர்களிடம் இருந்து ஓஜி கஞ்சா, மெத் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: தலை விரித்தாடும் போதை கலாச்சாரம்... என்ன முதல்வரே கண்ணுக்கு தெரியலையா? ஆர். பி. உதயகுமார் விளாசல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share