தலை விரித்தாடும் போதை கலாச்சாரம்... என்ன முதல்வரே கண்ணுக்கு தெரியலையா? ஆர். பி. உதயகுமார் விளாசல்...!
பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை பொருட்கள் கலாச்சாரம் தலை விரித்து ஆடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டினார்.
இன்றைய இளம் தலைமுறைக்கு போதைப்பொருட்கள் என்பது வெறும் அச்சுறுத்தலாக மட்டுமல்ல, அவர்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. போதைப் புழக்கத்தில், OG கஞ்சா என்பது உயர்தர, தூய்மையான அல்லது அசல் வகை கஞ்சாவைக் குறிக்கும் – இது வெளிநாட்டு செடிகளிலிருந்து தயாரிக்கப்பட்டு, அதிக THC (டெட்ராஹைட்ரோகனாபினால்) அளவைக் கொண்டிருக்கும்.
இந்தப் புழக்கத்தின் விளைவுகள் ஆபத்தானவை. உடல்நலம் ரீதியாக, OG கஞ்சா போன்ற உயர்தர வகைகள் THC அளவு அதிகமாக இருப்பதால், மூளையின் செயல்பாட்டை பாதிக்கின்றன. குறிப்பாக 17 வயதுக்கு முன் தொடங்கினால், நினைவாற்றல் குறைவு, மனநோய், மனச்சோர்வு போன்றவை ஏற்படும். இளம் வயதில் உட்கொள்ளல் மூளையின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இது பள்ளி தோல்வி மற்றும் வேலையின்மைக்கு வழிவகுக்கிறது. கஞ்சா மட்டுமல்லாது மதுப்பழக்கம், சிகரெட் உள்ளிட்ட பல போதைப் பொருட்கள் மாணவர்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது. மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒருமித்த குரல் எழுந்து வருகிறது.
இதையும் படிங்க: சரியாகிடும்மா... தென்காசி பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் KKSSR ஆறுதல்...!
இந்த நிலையில், போதை கலாச்சாரத்தால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருவதாகவும் இதை தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் முன்வரவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒருவர் குடிக்கு அடிமையாகும் நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது என்று தெரிவித்தார். திமுக ஆட்சியில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்ற செய்தி வேதனைக்கு ஆளாக்குவதாக தெரிவித்தார். பள்ளியின் அருகிலேயே போதைப்பொருள் விற்பனை அதிகரித்த நிலையில் போதை கலாச்சாரம் தலைவிரித்தாடுவதாகவும் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். போதை கலாச்சாரம் தலை விரித்தாடும் நிலையில் சாதிய எண்ணங்களால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: கைவிட மாட்டோம்... தூய்மை பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டங்கள்..! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு...!