எந்நாளும் மேகதாது அணைக்கு அனுமதியில்ல... பொறுப்பில்லாம பேசாதீங்க..! டி. கே. சிவக்குமாரை கண்டித்த நிர்மல்குமார்..!!
மேகதாது அணை எந்த நாளும் அனுமதிக்கப்படாது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை இந்தியாவின் மிக நீண்டகால இடைமாநில நீர் சர்ச்சைகளில் ஒன்று. இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து வரும் மோதலுக்கு மத்தியில், மேகதாது அணை திட்டம் மீண்டும் முக்கியப் பேசுபொருளாகியுள்ளது. 2025 நவம்பர் 13 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் மீது கர்நாடக-தமிழ்நாடு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இடம். கர்நாடக அரசு இங்கு சமநிலை நீர் தேக்க அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 67.16 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகவும், 400 மெகாவாட் மின்சக்தி உற்பத்தியுடன் கூடியதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணை பெங்களூரு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும், நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் உதவும் என்று கர்நாடகா கூறுகிறது.
தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் இந்தத் திட்டத்தை காவிரி நீர் பங்கீட்டு உத்தரவுகளுக்கு எதிரானது என்று கருதுகின்றனர். மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா அரசு உறுதியோடு கூறி வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக டி.கே. சிவக்குமார் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த முதல்வர் விஜய் மேகதாது விவகாரம் தொடர்பாக வலியுறுத்தல்களை முன் வைத்திருந்தார். கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேச்சு விவசாயிகளுக்கு கவலை அளிப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: கப்சிப்னு இருக்கணும்! வாய திறக்கக்கூடாது! கட்சியில் மீண்டும் இணைந்தவர்களிடம் இபிஎஸ் கறார்!!
துணை ஆற்றப்படுகை மாநிலங்களின் கருத்துக்களை கேட்காமல் மேகதாது அணை கட்டக்கூடாது என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காகவே டி.கே. சிவகுமார் பேசி இருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். எந்த காலத்தில் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார். கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது என்றும் கண்டித்துள்ளார்.
இதையும் படிங்க: அன்னதானம் TO கோவில் வருவாய் வரை முழு audit..!! யாராக இருந்தாலும் நடவடிக்கை..! அமைச்சர் ரமேஷ் வார்னிங்..!!