×
 

அன்னதானம் TO கோவில் வருவாய் வரை முழு audit..!! யாராக இருந்தாலும் நடவடிக்கை..! அமைச்சர் ரமேஷ் வார்னிங்..!!

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் தொடர்பாக ஆய்வை நடத்தி வருவதாகவும் முறைகேடு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போது தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில் கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர்.

இதனை புதிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் ஆய்வுக்காக சென்ற அமைச்சரிடமே அர்ச்சகர்கள் அடாவடியாக பணம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஐபி தரிசனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடமே பணம் கேட்ட அர்ச்சகர்களின் செயலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாஸ்க் அணிந்து ஆய்விற்காக சென்ற போது அமைச்சர் என தெரியாமல் பணம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சாதாரணமாக டி-ஷர்ட் அணிந்து சென்ற அமைச்சரிடம் நான்காயிரம் ரூபாய் தந்தால் விஐபி தரிசனத்தில் அழைத்துச் செல்வதாக அர்ச்சகர்கள் கூறியுள்ளனர். நான்காயிரம் ரூபாயை ஜிபே மூலம் செலுத்தி விட்டு கோவிலுக்கு சென்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அர்ச்சகர்களிடம் விசாரணையை நடத்தினார்.

இதையும் படிங்க: முருகன் கோவிலா... money counter- ஆ...? திருச்செந்தூரில் அமைச்சரிடமே அடாவடி கட்டண வசூல்..!!

முறைகேடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ரமேஷ், யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருவதாக கூறியுள்ளார். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று உறுதியளித்தார். அர்ச்சகர்களிடம் மன்னிப்பு கடிதம் மட்டும் வாங்கிவிட்டு நடவடிக்கை இல்லாமல் விட்டு விட்டதாக கூறுவது பொய் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். பாகுபாடு காட்டாமல் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

இதையும் படிங்க: தவறு நிரூபித்தால் கடும் ஆக்ஷன்..! அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..! போராட்டத்தை கைவிட்ட மாணவிகள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share