×
 

இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் தனியார்மயம்..! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு..!!

மின்துறையில் 15000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு 2026 மே மாதத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே, மாநிலத்தின் நிதி நிலை குறித்து கவலை தெரிவித்தது. குறிப்பாக மின்துறை மற்றும் மின்சார வாரியத்தின் கடன் சுமை பெரும் பேசுபொருளாக மாறியது. பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக தலைவர்கள் மின்வாரியத்தின் கடன் அளவை ரூ.2.5 லட்சம் கோடியாகக் குறிப்பிட்டு, இது திமுக ஆட்சியின் முறைகேடுகள் மற்றும் தவறான நிர்வாகத்தின் விளைவு என்று விமர்சித்தனர். 

இந்தக் கூற்றுகள் தமிழ்நாட்டின் மின்துறை நீண்டகாலமாக எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன. TANGEDCO-வின் கடன் பல ஆண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு அளவில் கடன் சுமார் ரூ.1.3 லட்சம் கோடியாக இருந்தது. பின்னர் அது அதிகரித்து, தவெக ஆட்சி பொறுப்பேற்றபோது சுமார் ரூ.2.5 லட்சம் கோடியை நெருங்கியிருந்ததாக அரசு தரப்பு தெரிவிக்கிறது. 

இந்த நிலையில், மின்துறையில் விரைவில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மின்துறையில் பதவி உயர்வு தாமதமின்றி வழங்கப்படும் என்று கூறினார். பணியிட மாற்றங்கள் நேர்மையாக நடைபெறும் என்றும் இதுமாதிரி பதவி உயர்வு 45 வருடங்களில் நடந்தது இல்லை எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: "9 வருஷமா கட்றாங்க... ஒரு அணையே கட்டிருக்கலாம்"..! மதுரை எய்ம்ஸ் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கருத்து..!

கொஞ்சநாள் விட்டிருந்தால் மின்துறை தனியார் மயமாகி இருக்கும் என்று கூறிய அமைச்சர் நிர்மல் குமார், மிக சவாலான துறை இது என்றார். பதவியேற்கும்போது ரூ.1.5 லட்சம் கோடி மின்துறை கடன் என நினைத்தேன் என்றும் ஆனால் ரூ.2.5 லட்சம் கோடியாக கடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: திமுகவின் XEROX தவெகவா.? வலுக்கும் எதிர்ப்பு..! தமிழக பாஜக விளாசல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share