நிதி ஒதுக்கும்போது உள்ள THANKS.. வெளில குறை! நிர்மலா ஓபன் ஸ்டேட்மென்ட்...
நிதி ஒதுக்கும்போது உள்ளே எனக்கு நன்றி கூறிவிட்டு வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது; நீதிமன்றம் கண்டித்த பின்னர் அமைச்சர்களின் நீக்கும் நிலை யாருக்கு வந்தது? திமுக கூட்டணிக்கா இல்ல பாஜக கூட்டணிக்கா?.,குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று. தங்களை விட வளர்ச்சியடையாதவை எனக் கூறும் வடமாநிலங்களில் கூட இத்தகைய அவலம் நிகழவில்லை.
இன்று தமிழ்நாட்டு வீதிகளில் சாதிப் பெயர் அடங்கிய தெருக்களின் பெயர் பலகைகள் காணப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது திமுகவின் வெற்றி எனக் கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுக கூடாது. ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதாக கூறுவது தவறு. முன்பு இருந்த நிலைதான் தற்போது உள்ளது. முன்பு பில் கொடுக்கவில்லை, தற்போது வெளிப்படையாக பில் கொடுக்கிறோம். அவ்வளவுதான்...
இதையும் படிங்க: ED ரெய்டுக்குப் பின்... நிர்மலா சீதாராமனை சந்தித்த கே.என்.அருண் நேரு..? நயினாரை வைத்து கேம்..!
ஜிஎஸ்டி என்பது மோடி போடும் வரி இல்லை., எல்லா மாநில நிதியமைச்சர் அடங்கியதுதான் கவுன்சில். நிதி ஒதுக்கும்போது மறைமுகமாக எனக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
இதையும் படிங்க: சீமான் ஏன் நிர்மலாவை சந்திக்க வேண்டும்..? 'சசிகலாவையே வீழ்த்திய எங்களால் நேரடியாக மோடியுடனே பேச முடியும்..!'