×
 

நெய்வேலி சுரங்க விரிவாக்கம்.. எதிர்ப்பை மீறி வெளியான அரசாணை... தமிழக அரசு நடவடிக்கை..!!

நெய்வேலி நிலக்கரிச் சுரங்க விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்த அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (என்.எல்.சி.ஐ.எல்) நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத் திட்டங்கள் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை பாதித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று தென்குத்து கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் அமைப்புகளின் எதிர்ப்பை மீறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெய்வேலி பகுதியில் திறந்தவெளி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த நிலக்கரி அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது உள்ள சுரங்கங்களின் விரிவாக்கம் மற்றும் புதிய சுரங்கங்கள் அமைக்கும் திட்டங்களுக்காக பல ஆண்டுகளாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. 1956 முதல் இதுவரை 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர் விவசாயிகள், குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்குத்து உள்ளிட்ட பகுதிகளில் சுரங்க விரிவாக்கத்துக்காக முன்பே நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருந்தாலும், சில இடங்களில் உரிமையாளர்கள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தனர். இப்போது அந்த நிலங்களை உடனடியாக ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு, தொழில்துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த அறிவிப்புகளில் குறிப்பிட்ட சர்வே எண்கள், பட்டா விவரங்கள், நில அளவு மற்றும் உரிமையாளர்கள் பெயர்கள் இடம் பெறுகின்றன. இழப்பீடு தொகை என்.எல்.சி. நிதியில் இருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: ஆக.1ம் தேதி முதல்.. தபால் கட்டணத்தில் முக்கிய மாற்றம்..!! புதிய கட்டணங்கள் அறிவிப்பு..!!

விரிவாக்கத் திட்டங்கள் மூலம் கூடுதல் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடியும் என என்.எல்.சி. நிர்வாகம் நம்புகிறது. இந்த நிலையில் நெய்வேலி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை உள்ளவர்கள் 30 நாட்களில் எதிர்ப்பை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை மீறி தென்குத்து கிராமத்தின் நிலம் கையகப்படுத்துவதற்கான தமிழக அரசு சார்பில் அறிவிப்பானை வெளியிடப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: 41 இடங்களில் ரெய்டு..! சாட்டையை சுழற்றும் விஜய் அரசு..! பரபரக்கும் தமிழகம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share