#BREAKING: வேட்புமனு பரிசீலனை மும்முரம்..! துணை முதல்வர் உதயநிதி, நயினார் உள்ளிட்டோர் மனுக்கள் ஏற்பு..!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், மார்ச் 30 முதல் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்கினர். இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அறிவித்த தேர்தல் அட்டவணையின்படி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்க உள்ளனர்.
இதில் ஆண்கள் சுமார் 2.77 கோடியும், பெண்கள் சுமார் 2.89 கோடியும் அடங்குவர். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 12.51 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.
பல்வேறு அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு ஏற்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளிலும் அவரது மனு ஈர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: மீண்டும் கொளத்தூர் தொகுதி..! முதலமைச்சர் ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்பு..!!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் nda கூட்டணியில் போட்டியிடும் சௌமியா அன்புமணியின் வேட்பு மனு ஏற்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் என் டி ஏ கூட்டணியில் பாஜகவின் சார்பில் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. இதே போல் சுந்தர். சி மனுவும் ஏற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: விசில் போடு..! பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பு மனு ஏற்பு..!