சென்னையில் உச்சக்கட்ட கொடூரம்... மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை நாசம் செய்த வட மாநிலத்தவர்கள்...!
தேநீர் குடிக்க பணம் கேட்ட மூதாட்டி வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை வேளச்சேரியில் நேற்று அதிகாலை மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி, தேநீருக்கு கொடுக்க காசு கேட்டபோது அங்கிருந்த பீகார் இளைஞர்கள் மூதாட்டியிடம் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து வீட்டில் தேநீர் போட்டு தருகிறோம் என அழைத்து சென்றுள்ளனர். குறிப்பாக ராப்பிடோ டாக்ஸி புக் செய்து அந்த மூதாட்டியை அழைத்துச் சென்றுள்ளனர். ரேப்பிடோ டிரைவர் இந்த மூதாட்டி யார் என கேட்ட போது அந்த நபர்கள் “எனது அம்மா உடல்நிலை சரியில்லை. அதனால் டீ குடிக்க அழைத்து வந்தோம்” என ரேப்பிடோ டிரைவரிடம் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு பீகார் இளைஞர்கள் அழைத்துச் சென்றபோது அந்த மூதாட்டி அங்கே கூச்சலிட்டுருக்கிறார். சரி மீண்டும் டீக்கடைக்கே அழைத்து சென்று டீ வாங்கி தருகிறோம் என அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் டீக்கடைக்கு அழைத்துச் செல்லாமல் அங்கு இருக்கக்கூடிய மாநகராட்சி பூங்காவுக்குள் அழைத்துச் சென்று மூதாட்டியை தாக்கி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இருவரும் தங்கள் இருக்கக்கூடிய அறைக்கு தப்பி ஓடியுள்ளனர்.
5 மணி அளவில் மீண்டும் அந்த பகுதிக்கு வேறு சட்டையை மாற்றிக் கொண்டு வந்துள்ளனர். மூதாட்டி எந்த நிலையில் இருக்கிறார் என்பதை பார்ப்பதற்காக வேறு ஆடை அணிந்து வந்திருக்கிறார்கள். அப்போது எதார்த்தமாக அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்ற காவலர் இவர்கள் மீது சந்தேகம் அடைந்து இவர்கள் இருவரையும் போட்டோ எடுத்து இரவு பணியில் இருந்த தங்களது காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அந்த போட்டோவை அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தொடரும் அவலம்... வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை...!
காலையில் இந்த மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் வெளியில் பூதாகரமாக வெளிவந்ததை அடுத்து வேளச்சேரி தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சிசிடிவியில் பதிவான இருவர் உருவமும் இந்த ரோந்து போலீஸ் எடுத்து அனுப்பிய போட்டோவில் உள்ளவர்களின் உருவமும் ஒத்து போயிருந்தது. இதனையடுத்து இவர்கள் தான் குற்றவாளி என்பதை கைது செய்து அடுத்த சில நிமிடங்களிலே குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர்.
இன்று காலை பீகாரைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரையும் மகிளா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த இருக்கிறார்கள். இது மட்டுமின்றி விரைவில் அடையாள அணிவகுப்பு நடத்தப்படும் எனும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த குற்றவாளிகளை நேரில் பார்த்த அந்த ரோந்து காவலர், ரேபிட்டோ டாக்ஸி டிரைவர் ஆகிய இருவரையும் அழைத்து பிற குற்றவாளிகளுடன் நிறுத்திவைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்படும். அப்போது இந்த ரோந்து காவலரும் அதேபோல ராப்பிடோ டாக்ஸி டிரைவரும் நாங்கள் பார்த்தது இவர்தானா என்பதை பார்த்து உறுதி செய்து தெரிவித்தால், அங்குள்ள நீதித்துறை நீதித்துறை அதிகாரிகளிடமும் போலீசார் தெரிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!