×
 

கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

கொளத்தூர் தொகுதி EVM எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக என். ஆர். இளங்கோ தெரிவித்தார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர், அந்தத் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு கிடங்கில் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த மனுவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் தோல்வியடைந்ததாக அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவித்தன. இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில், தொகுதியின் சில வாக்குச்சாவடிகளில் EVM இயந்திரங்கள் சரியாக செயல்பட்டதா என சந்தேகம் எழுப்பி ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.

குறிப்பாக, அந்த 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அலகுகள், வாக்குப் பதிவு அலகுகள் மற்றும் VVPAT இயந்திரங்களின் செயல்பாட்டை சரிபார்க்கக் கோரியிருந்தார். மேலும், மைக்ரோ கண்ட்ரோலர் பகுதிகளை உறுதிப்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு சட்டப்படி பரிசீலிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் இன்று ஆய்வு நடத்த முடிவு செய்தது. ஆய்வுகள் தொடங்கி நடைபெற்ற நிலையில், EVM இயந்திரங்களில் இருந்த முகவரி நிரப்பாமல் இருந்ததாக என்.ஆர். இளங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: 2 நாள் லீவ்..! மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..! சர்ச்சைக்கு DOT..!

7 EVM இயந்திரங்களில் முகவரி இருக்கும் காகிதம் புதிதாக இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார். வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல்களும் முறையாக இல்லை என்றும் குற்றம் சாட்டினார். கொளத்தூர் தொகுதி EVM- ல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாகவும் இதற்காக நீதிமன்றத்தை நாடக இருப்பதாகவும் என்.ஆர். இளங்கோ தெரிவித்தார். 

இதையும் படிங்க: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக முடியாது! விலக்கு கேட்கும் செந்தில் பாலாஜி! புதிய கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share