×
 

"எங்கள் அப்பா பாரதிராஜாவுக்கு வீரவணக்கம்"..! உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை..!!

மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை செலுத்தினர்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகுக்கு மிகப்பெரிய பேரிழப்பாக இருக்கிறது. தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார்.

அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர்.

கடந்த சில வருடங்களாக படங்களில் நடித்து வந்தவர், தனது மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாக முடங்கிப் போனார். கடந்த ஒரு சில மாதங்களாக பாரதிராஜா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "என் அப்பா பாரதிராஜா"..!! தவிக்கிறேன்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனவேதனை..!

இயக்குனர் பாரதிராஜாவின் உடலுக்கு சென்னையில் பல்வேறு திரைப்படங்களும் அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து தேனி மாவட்டத்திற்கு பாரதிராஜாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. வத்தலகுண்டுவில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. பாரதிராஜாவின் உடன் தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஓ. பன்னீர்செல்வம் உட்பட பல அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பாரதிராஜா ஒரு தகப்பன் போல. என் அப்பா என்று தான் தனது இரங்கலை கூட தெரிவித்தார்.

இந்த நிலையில் தேனியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியினர் மரியாதை செலுத்தினார். கட்சிப் போர்வையை பாரதிராஜாவின் மீது போர்த்தி, மாலை அணிவித்து சீமான் மரியாதை செலுத்தினார். இயக்குனர் இமயம், பெருந்தலைவர், எங்கள் அப்பா பாரதிராஜாவுக்கு வீர வணக்கம் என்று கூறி நாம் தமிழர் கட்சியினர் தங்களது இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. 

இதையும் படிங்க: மாரிதாஸ் மீது பாய்ந்த சட்டம்... அதிகார திமிரின் உச்சம்..! சீமான் ஆவேசம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share