×
 

“எட்டி ஒரு உதை விட்டேன்...” - என்னடா இது சீமானுக்கு வந்த கொடுமை? - வைரலாகும் வீடியோ...!

பனைமரத்தில் மூங்கில்களைக் கொண்டு படிக்கட்டு செய்து மரம் ஏறிய வீடியோ சர்ச்சையைக் கிளப்பியது.

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஆடு, மாடுகளைக் கொண்டு சீமான் மாநாடு நடத்தி முடித்திருக்கிறார். சீரான புறவழிகள், நில உரிமை, கால்நடை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி நடத்திய இந்த மாநாட்டில் சீமான், ஆடு, மாடுகள் தமிழ்நாட்டிற்கு, அதன் விவசாயத்திற்கும் எவ்வளவு முக்கியமானவை என உணர்ச்சிப்பொங்க பேசியுள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையே, வழக்கம் போல் சீமானை ட்ரால் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து இயற்கை விவசாயம், தற்சார்பு பொருளாதாரம் , ஆடு, மாடுகள் வளர்ப்பு, கோழிகள் வளர்ப்பு, பனை, தென்னை கள் இறக்குவது என தொடர்ந்து இதுகுறித்து பேசியும் செயல்பட்டும் வருகிறார். திருச்செந்தூர் அருகே பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக மதுரையில் ஆடு மாடுகளை கொண்டு மாநாடு ஒன்றை நடத்தி தற்போது கவனம் ஈர்த்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மாடுகளை எவ்வாறு ஒரே இடத்தில் கூட்டுவது என்று பலரும் சந்தேகம் தெரிவித்தனர். மாநாட்டு பணிகளை சீமான் நேரடியாக பலமுறை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிக விளக்கு ஒளி மற்றும் ஸ்பீக்கர் சத்தத்தால் மாடுகள் மிரண்டு போகின்றனவா என்றும் ஆய்வு செய்து பின்னர் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: அடுத்த சம்பவத்தை செய்த நாதக.. கால்நடைகளுக்கு முன் உணர்ச்சி பொங்க பேசிய சீமான்..!

3 ஆயிரத்திற்கும் அதிகமான நாட்டு மாடுகளைக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்ட மாநாட்டில், மேய்ச்சல் நிலங்களை மீட்டல், கால்நடை காப்புரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், கால்நடைகளுக்கு காப்பீடு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்கனவே கள் இறங்கும் போராட்டத்தின் போது சீமான், பனைமரத்தில் மூங்கில்களைக் கொண்டு படிக்கட்டு செய்து மரம் ஏறிய வீடியோ சர்ச்சையைக் கிளப்பியது. உடனே பனை மரம் ஏறத் தெரிந்த பலரும், விதவிதமாக மரம் ஏறி இப்படி உன்னால் ஏற முடியுமா? என சீமானுக்கு சவால் விடுத்தனர். 

தற்போது மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக மாட்டிற்கு மரியாதை செய்யச் சென்ற சீமான் அதைப் பார்த்து மிரளும் வீடியோ வைரலாகி வருகிறது. மாடு ஒன்றிற்கு மாலை அணிவித்து மாநாட்டை துவங்குவதற்காக சீமான் அதன் அருகே செல்கிறார். அதற்கு முன்பு மாட்டின் உரிமையாளர் அல்லது நாம் தமிழர் நிர்வாகி ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். சீமான் மாட்டை நெறுங்கியதும் செம்ம டென்ஷன் ஆகிறது. பின்னங்கால்களை இரண்டையும் வேகமாக அடிக்கிறது. சீமானை நோக்கி தூக்குகிறது. பார்க்க ஏதோ “கிட்ட வந்த எட்டி உதைத்து தள்ளிடுவேன்” என மாடு வார்னிங் கொடுப்பது போல் உள்ளது. இதைப் பார்த்து மிரண்ட சீமான் உடனே அந்த நாதக நிர்வாகியின் பின்னால் போய் மறைந்து கொள்கிறார். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

என்னடா இது !! உன்னைய வீராதி வீரன் சூரன்னு சொன்னானுக மாடு மிரண்ட உடனே ஓடிப் போய் ஒழியுற

உன் குரலை கேட்டு மாட்டுக்கே கோபம் வந்துடுச்சு 😆 pic.twitter.com/YB2fA5DXyU

— கபிலன் (@_kabilans) July 10, 2025

இதையும் படிங்க: கட்சி கொடியில் குழப்பம் வரும்... நாதக-வை விஜய் பின்பற்றுவதில் மகிழ்ச்சி... சீமான் சுவாரஸ்ய தகவல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share