×
 
☰

நாதக கார்த்திகாவுக்கு ரிமாண்ட்.! அதிகாலை கைதும்... 15 நாள் சிறையும்..! பரபரக்கும் தாராபுரம்..!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட ஒன்பது பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா உள்ளிட்ட ஒன்பது பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பிரச்சார காலத்தில் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டு, நேற்றிரவு தாராபுரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பின் நீதிபதி உமாமகேஸ்வரி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கைதானவர்கள் அனைவரும் கோவை மத்தியச் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகா, கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். தேர்தல் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு, கோவையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலை நேரத்தில் தாராபுரம் காவல்துறையினர் சென்று அவரைக் கைது செய்தனர். அவரது கணவர் முருகு சந்திரகுமாரும் அதே நேரத்தில் கைது செய்யப்பட்டார். இவர்களுடன் தென்காசியைச் சேர்ந்த இசை மதிவாணன், மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் சஞ்சய் காந்தி, தாராபுரம் தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, ஷேக் பரீத், தாராபுரம் நகரப் பொறுப்பாளர் சூர்யா, மாணவர் பாசறைச் செயலாளர் கோகுல், சோழவந்தான் இளைஞர் பிரிவு செயலாளர் விக்னேஷ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் ஒன்பது பேர் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

 

இந்தக் கைதானது இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. அக்டோபர் 4ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தாராபுரம் பகுதியில் ரோடு ஷோ நடத்தியபோது, அந்த வழியில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் செய்ய முயன்றனர். காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், காவல்துறை பணியைத் தடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி பலர் தற்காலிகமாகக் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதே காலகட்டத்தில் கட்சி பேனர் அகற்றப்பட்ட விவகாரத்திலும், காவல் நிலையத்தை முற்றுகையிட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த மூன்று வழக்குகளிலும் கார்த்திகா உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றிருந்தது.

இதையும் படிங்க: "விஜய் ஆட்சி ஒழிக"..! மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற கார்த்திகா கண்டன முழக்கம்.!!

கைதானவர்கள் தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது கார்த்திகா பேசியதாகத் தெரிகிறது. அதிகாலை ஐந்து முப்பது மணிக்குத் தூங்கிக்கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டதாகவும், எதற்காகக் கைது செய்யப்பட்டோம் என்பதே தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாயின. நேற்றிரவு அவர்கள் தாராபுரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு நீதிபதி 15 நாட்கள் நீதிமன்றக் காவல் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் கோவை மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

இதையும் படிங்க: சட்ட நடவடிக்கையா.? திட்டமிட்ட பழிவாங்கலா.? கார்த்திகா கைது..! வேல்முருகன் எதிர்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share