×
 

கர்நாடக கொடியை அகற்றச் சொல்லி தாக்குதல்...! இந்தக் கோபம் திராவிட கட்சிகள் மேல வரணும்... சீமான் கண்டனம்..!

தங்கள் மாநிலக்கொடிக்கு பெருமதிப்பு தரும் கன்னட மக்களின் இனப்பற்றினைப் போற்றி, பின்பற்ற வேண்டுமே தவிர, புரிதலற்று வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது தேவையற்றது என சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே சென்று கொண்டிருந்த கர்நாடக வாகனத்தை மறித்து, அதில், பொருத்தப்பட்டிருந்த கர்நாடக மாநிலக் கொடியை அகற்றச்சொல்லி, அதில் பயணித்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் இதுபோன்ற புரிதலற்ற, தேவையற்ற வன்முறைச் செயல்கள் வன்மையான கண்டனத்துக்குரியது எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநில முதல்வர் இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றும் வேளையில், அருகிலேயே கர்நாடக மாநிலக் கொடியையும் ஏற்றுகின்றார் என்றும் கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரே தன்னுடைய அரசு வாகனத்தில் இந்திய கொடியுடன், கர்நாடக மாநிலக் கொடியையும் பொருத்தியுள்ளார். கோலார் தங்கவயல் சுரங்கங்களில் அணுக்கழிவை பாதுகாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டபோது இதே கன்னடக்கொடியை ஏந்தியே ஒற்றுமையுடன் தங்களின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அச்சதியை கன்னட மக்கள் முறியடித்தனர் எனவும் சீமான் குறிப்பிட்டார்.

அண்டை மாநிலங்களுடனான எல்லைச்சிக்கல், நதிநீர் சிக்கல், இந்தி திணிப்பு எதிர்ப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு உள்ளிட்ட எந்தவொரு மாநில உரிமைச்சார்ந்த பிரச்சனைகளிலும் கர்நாடக கொடியை ஏந்தியே கன்னட மக்கள் உரிமை மீட்கின்றனர் என்று கூறியுள்ள சீமான், கன்னட மக்களின் உணர்வுடன் இரண்டற கலந்து, அவர்களது ஒற்றுமையின் அடையாளச் சின்னமாக திகழும் கர்நாடக மாநில கொடியை கன்னட மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் மிகப்பெருமையோடு தங்கள் கைகளிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் பொருத்துகின்றனர் என்றும் அது அவர்களின் அடிப்படை உரிமை எனவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: ஆண்களுக்கும் இலவச பயணமா? ஏற்கனவே மகளிரை அசிங்கப்படுத்தியது போதாதா? கொந்தளித்த சீமான்..!

கன்னட மக்களின் அத்தகு இன உணர்வை மதித்து நாம் போற்ற வேண்டும் எனக் கூறியுள்ள சீமான், அவர்களிடமிருந்து இன ஓர்மையையும், மாநிலக் கொடிக்கான மாண்பையும் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை வெறுப்பதோ, அதற்காக தாக்குவதோ தேவையற்றது என்றார். 

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டும், தமிழ்நாட்டிற்கென்று தனித்த கொடி உரிமையை வாங்கி தராத திமுக, அதிமுக கட்சிகள் மீது உங்கள் கோபம் இருந்திருக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும், எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தும் இதுபோன்ற இழிசெயல்களில் இனிமேல் எவரும் ஈடுபட கூடாது என்றும் சீமான் கூறினார். 

இதையும் படிங்க: தமிழக விவசாய சங்கத்தினர் கைது... கொடுமையின் உச்சம்...! சீமான் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share