ஐயா எங்க வீடெல்லாம் போய்டுச்சு..! சீமானிடம் அழுது புலம்பிய அனகாபுத்தூர் மக்கள்..!
சென்னை அனகாபுத்தூரில் அகற்றப்பட்ட வீடுகளை பார்வையிட சென்ற சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சீமான் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அனகாபுத்தூரில் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து 700 குடியிருப்புகள், கடைகள் கட்டப்பட்டிருந்தது. அவற்றில் கடந்த 2023-ம் ஆண்டு 20 கடைகள், 90-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை நேற்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கியூஆர் கோட் மூலம் திரள் நிதி வசூலிப்பு.. நாம் தமிழர் கட்சியினர் புகைப்படம் வைரல்!!
இந்த நிலையில், அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அக்கற்றப்பட்டு வரும் மக்களை சந்திக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்திற்கு சீமான் செல்ல போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதனை மீறி சென்றதால் தடுத்து நிறுத்தினர். பேச்சுவார்த்தை நடத்த போலீசார் முற்பட்ட நிலையில் அதனை ஏற்காத சீமான் மக்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனை அடுத்து வீடுகளை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக போராடிவரும் மக்களை சந்தித்து சீமான் ஆறுதல் கூறினார். அப்போது வீடுகளை இழந்த மக்கள் சீமானிடம் அழுது முறையிட்டனர்.
இதையும் படிங்க: சொன்னீங்களே.. செஞ்சிங்களா? - சீமான் விவகாரத்தில் டென்ஷன் ஆன நீதிபதி..!