×
 

ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

இந்த விலை வித்தியாசம் காரணமாக, முன்பு தனியார் பாலை வாங்கியவர்கள் பெருமளவில் ஆவின் பக்கம் திரும்பியுள்ளனர்.

தனியார் நிறுவனங்களின் பால் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தமிழகத்தில் ஆவின் பாலுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஆவின் பால் பாக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக மாநிலம் முழுவதும், குறிப்பாக சென்னையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த ஆண்டில் மட்டும் தனியார் பால் விலை லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஆவின் பால் இதனை விட லிட்டருக்கு 22 முதல் 30 ரூபாய் வரை மலிவாகக் கிடைக்கிறது. பச்சை நிற பாக்கெட் பால் 30 ரூபாய், ஆரஞ்சு நிற பால் 26 ரூபாய், நீல நிற பால் 22 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. இந்த விலை வித்தியாசம் காரணமாக, முன்பு தனியார் பாலை வாங்கியவர்கள் பெருமளவில் ஆவின் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால் மூன்று வகையான ஆவின் பால்களும் கடைகளில் உடனடியாக விற்றுவிடுகின்றன. 

முன்பெல்லாம் கேட்கும்போது கிடைத்துவந்த பால், இப்போது காலையிலேயே தீர்ந்துவிடுகிறது. ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் தினசரி 31.56 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 14.50 லட்சம் லிட்டர் அளிக்கப்படுகிறது. கொள்முதல் அளவு 30 லட்சம் லிட்டராக உள்ளது. சப்ளை குறைக்கப்படவில்லை. ஆனால் தேவை அதிகரித்துள்ளதால் உடனடியாக கொள்முதலை உயர்த்தி விநியோகம் செய்வது கடினம்” என்றார்.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு... அரசியல் தலையீடு காரணமா? - என்ன நடக்கிறது?

ஏழைக் குடும்பங்கள், கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், மலிவான ஆவின் பால் கிடைக்காமல் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆவின் கொள்முதல் விலை லிட்டருக்கு 44 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 

இதனால் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து, ஆவினுக்கு அதிகமாகப் பாலை வழங்கத் தொடங்கியுள்ளனர். அக்டோபர் 15 முதல் கொள்முதல் அதிகரிக்கப்படும் என்றும், அதன் மூலம் அதிகரித்துள்ள தேவையைச் சமாளிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விலை வேறுபாட்டால் ஏற்பட்டுள்ள இந்தத் தட்டுப்பாடு, விரைவில் சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த மாதம் பவர்கட் பிரச்சனைக்கு தீர்வு!! அதிகாரிகள் தகவல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share