நகைக்காக மூதாட்டி துடிக்க துடிக்க கழுத்தறுத்துக் கொலை! திருச்சியில் ஓர் கொடூர சம்பவம்...
திருச்சியில் நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டியைச் சேர்ந்த சூசை மாணிக்கத்தின் மனைவி குழந்தை தெரசு. சூசை மாணிக்கம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் 65 வயதான குழந்தை தெரசு வாழ்ந்து வந்துள்ளார். வழக்கம் போல் அவர் வீட்டில் உறங்கியுள்ளார். புழுக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் தாழ்வாரத்தில் படுத்துள்ளார். இதன்பிறகு அவர் அயர்ந்து தூங்கிய நிலையில், மர்ம நபர்கள் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிகிறது. அவர்கள் குழந்தை தெரசு அணிந்திருந்த ஒரு செயின், தோடுகள் மற்றும் ஒரு மூக்குத்தி ஆகியவற்றையும் திருடி சென்றது தெரியவந்துள்ளது. மூதாட்டி உயிரிழந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற வையம்பட்டி போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபணர்களுடன் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட மூதாட்டி உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் நகைகளுக்காக மூதாட்டிகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நெல்லை வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் 71 வயது மூதாட்டி தனியாக இருந்தபோது அடித்துக் கொலை செய்யப்பட்டு, 14 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பொள்ளாச்சியில் மூதாட்டி தெய்வானையம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது, நகைகளை பறிக்கும் நோக்கில் அவரது மருமகள் உட்பட ஐந்து பேர் கொலை செய்தனர். இதேபோல் ஈரோடு மாவட்டம் விளாங்காட்டு வலசு கிராமத்தில் முதிய தம்பதியர் நகைகளுக்காக கொலை செய்யப்பட்டனர். இதுபோல பல இடங்களில் நகைகளுக்காக முதியவர்கள் கொலை செய்யப்படும் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் தொடரும் பயங்கரம்... தனியாக இருந்த மூதாட்டி துடிதுடிக்க கொலை...!
இதையும் படிங்க: மட்டம் தட்டிய ரவுடி... MURDER செய்த சகாக்கள்... தலையை சிதைத்து, கழுத்தை அறுத்த கொடூரம்!