இப்படியா பண்ணுவீங்க? ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்... அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை...!
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரித்தார்.
தமிழ்நாட்டில் பண்டிகை காலங்கள் என்பது மகிழ்ச்சியும், குடும்ப இணைப்பும் நிறைந்த காலமாக இருந்தாலும், பயணிகளுக்கு இது அவதியின் காலமாகவே மாறிவிட்டது. குறிப்பாக, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புது வருடம் போன்ற பெரிய பண்டிகைகளின் போது, ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை கணிசமாக உயர்த்துவதால், சாதாரண மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பண்டிகை காலங்களில் பயணத் தேவை திடீரென அதிகரிப்பது இந்தப் பிரச்சினையின் முதல் காரணம். தமிழ்நாட்டின் பெரு நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள், பண்டிகைகளுக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால், பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட இரு மடங்கு அதிகரிக்கிறது. இதனால், அரசு சாலை போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும், அவை போதுமானதாக இருப்பதில்லை.
கட்டண உயர்வின் அளவு குறித்து பார்க்கும்போது, இது ஆண்டுதோறும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மும்மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல ரூ.1,800 ஆக இருந்த கட்டணம் ரூ.5,000 வரை உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வண்ண மீன்கள் என்றாலே கொளத்தூர் தான்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!
இந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரித்தார். கட்டண வசூலை கண்காணிக்க போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார். தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததால் அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதையும் படிங்க: ஆம்னி பஸ்களில் பகல் கொள்ளை... அரசு கண்டுக்காதா? வேல்முருகன் கொந்தளிப்பு...!